உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமஜென்ம பூமியில் காலணிகளை விட்டுச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள்: காரணம் இதுதான்!

ராமஜென்ம பூமியில் காலணிகளை விட்டுச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள்: காரணம் இதுதான்!

அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தினமும் லட்சக்கணக்கான காலணிகள் ஏன் தேங்குகிறது என்பதற்கான காரணங்களை கோவில் அதிகாரிகள் விளக்கி உள்ளனர்.உ.பி.யில் அயோத்தியில் 2024ம் ஆண்டு ஜன.22ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தினமும் ராமஜென்ம பூமியில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஒரு மாதம் கடந்தும், ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்களால் அயோத்தி நகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய பிரச்னையை சந்தித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் காலணிகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர்.இதனால் எங்கு பார்த்தாலும் காலணிகளாகவே ராமர் கோவில் சுற்றுவட்டார பகுதி முழுவதும் காட்சி அளிக்கிறது. அதற்கான காரணங்கள் என்ன என்று அதிகாரிகள் தரப்பில் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுவதாவது; ராமல் கோவிலின் முதல் நுழைவுவாயிலில் உள்ளே வரும் பக்தர்கள் தங்களின் காலணிகளை விடுமாறு பணிக்கப்படுகின்றனர். அதன் பின்னர் கோவிலை சுற்றி பார்த்து தரிசனம் முடித்த பிறகு, அரைகிலோ மீட்டர் நடந்து சுற்றுப்பாதையை முடிக்கின்றனர். பின்னர், மீண்டும் தங்கள் காலணிகளை சேகரிக்க அதே முதல் நுழைவு வாயிலுக்கு வருகின்றனர்.கூட்டம் அதிகரித்து வரும் தருணத்தில் பக்தர்களை 3வது நுழைவுவாயில் வழியாக வெளியேறும்படி கோவில் ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர். பக்தர்கள் அப்படியே செல்வதால் முதல் நுழைவுவாயிலில் அவர்கள் விட்டுச் சென்ற காலணிகளை சேகரிக்க முடியாமல் போகிறது. 5 முதல் 6 கி.மீ. வரை சுற்றி வந்து காலணிகளை எடுத்துச் செல்ல வேண்டி இருப்பதால் அவர்கள் காலணிகளை விட்டுவிட்டுச் செல்கின்றனர். இதுவே லட்சக்கணக்கான காலணிகள் தேங்க காரணம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். அதே நேரத்தில் ராமஜென்ம தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறுகையில், 'எதிர்பாராத தருணங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது. எவ்வித குழப்பங்களும் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் கடந்த 30 நாட்களாக பல்வேறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mahalingam Laxman
மார் 04, 2025 08:43

I appreciate the good services rendered by Prayagraj and Ram Janama Boomi Ram Mandir services in controlling the crowd. Even in temples the distance is not the problem the carelessness of devotees in leaving footwear without reclaiming. I would suggest keeping the footwears in a transpor shelves and move it to the exiting points so that the devotees can avoid long distance "shine or rain" walking and pleased to collect their foot wears. I understand it is extra labor on the part of management. But it is worth considering the benefits to devotees.2. Put up notice boards in more languages prominently saying footwears not collected by closing time will be thrown away.


கொங்கு தமிழன் பிரஷாந்த்
மார் 03, 2025 23:23

கோவில் நிர்வாகம் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். செருபிலாமல் மக்கள் என்ன செய்வார்கள். வடக்கில் வேறு மக்கள் புகையிலை கண்ட இடத்தில் தூப்புவார்கள்.


Rajathi Rajan
மார் 03, 2025 19:58

ஏன்டா இங்கு வந்தோம் என தனக்கு தானே தன் தலையில் அடித்து விட்டு அங்கேயே போட்டு விட்டுவிட்டார்கள் போல, கண் கெட்ட பின்னல் சூரிய நமஸ்கரம்,,,


Tetra
மார் 03, 2025 19:05

இது பக்தர்களின் பொறுப்பின்மையை காண்பிக்கிறது. நான் கூட அப்படித்தான் வேறு வழியாக வந்தேன். ஆனால் திரும்பிச்சென்று எங்கு விட்டேனோ அங்கேயே போய் எனது காலணியை பெற்றுக்கொண்டேன். திருப்பதியை விட சிறப்பான முறையில் சேவை செய்கிறார்கள். உங்களுக்கு டோக்கன் தருகிறார்கள். எந்த வரிசை எந்த லாக்கர் என்று.


nalledran
மார் 03, 2025 16:30

இன்னும் செருப்புக்கூட வழியில்லாமல் நம்ம ஊர் கிராமத்துப் பிள்ளைகள் பள்ளி செல்கின்றனர். அதைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதில்..


அப்பாவி
மார் 03, 2025 12:33

பரதனுக்கு செய்யும் மரியாதை.


Dharmavaan
மார் 03, 2025 12:02

காலணியை டோக்கன் மூலம் வெளியே வரும் வாயிலில் காலனியை கொண்டுவந்து கொடுக்கலாமே


R K Raman
மார் 03, 2025 15:36

அங்கு வந்த கூட்டம் மிக மிக மிக அதிகம். ஆனால் தரிசனம் மிகவும் சுலபம். நம் அரசுகள் போல காசு கறப்பது கிடையாது. 70 வயது மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த ஏற்பாடு. 150 ரூபாய் தள்ளு வண்டியில் செல்ல. அந்தப் பணம் வண்டி தள்ளியவருக்கு. இதுவே இங்கு அல்லது திருமலை என்றால் பணம் கறந்து லட்சம் கோடி சம்பாதிக்கும் வாய்ப்பு போச்சு என்று ஏங்கி விடுவார்கள். சுமார் 12 கோடி பேர் 45 நாட்களில் தரிசனம் செய்து உள்ளார்கள். நீங்கள் சொல்வது போல் செருப்பு சேவைகள் மிகவும் கடினமாக இருக்கும்


Ramona
மார் 03, 2025 10:50

கட்டுரையின் தலைப்ப பார்த்தால், காலனிகளை விட்டு செல்ல இதுவும் ஒரு வேண்டுதலோ என்ற சந்தேகம் ஏற்பட்டது நல்ல வேளையாக அப்படி எதுவும் இல்லை என பார்க்கையில் நிம்மதியாக இருக்கு.


sri
மார் 03, 2025 10:27

மீனாட்சி அம்மன் கோவிலில் இது போன்ற குழப்பம் தினசரி ஏற்படுகிறது. நுழைவாயில் வழியாக வெளியேறாதவரை இது போன்ற குழப்பங்கள் ஏற்படும். திருப்பதி கோவில் தேவஸ்தானம் வெளியே வரும் வாசலில் பாதணிகளை கொண்டு சேர்க்கிறது


Loganathan Kuttuva
மார் 03, 2025 14:59

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வெளியூர் பக்தர்கள் தெற்கு கோபுரம் வழியாக eng உள்ளே சென்று வெளியே கிழக்கு அல்லது மேற்கு கோபுரம் வழியாக வெளியே செல்கிறார்கள் .அந்த செருப்பு டோக்கனில் E,W,S,N என்ற குறியீடு இருக்கும். எங்கே செருப்பு விட்டு சென்றோமா அந்த வாயிலில் சென்று செருப்பு வாங்கிக்கொள்ள வேண்டும் .அவ்வாறே செல் போனும் .


முக்கிய வீடியோ