உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., முதல்வர் பட்னவிஸை சந்தித்த ரமேஷ் ஜார்கிஹோளி

மஹா., முதல்வர் பட்னவிஸை சந்தித்த ரமேஷ் ஜார்கிஹோளி

மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸை, கர்நாடக பா.ஜ., அதிருப்தி அணியின் ரமேஷ் ஜார்கிஹோளி சந்தித்து பேசினார்.மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு மும்பையில், தேவேந்திர பட்னவிஸை, கர்நாடகாவின் பெலகாவி கோகாக் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் சந்தித்து பேசினர்.ரமேஷ் ஜார்கிஹோளி கூறுகையில், ''தேவேந்திர பட்னவிஸ் எனது நீண்டகால நண்பர். முதல்வர் ஆனதால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன். இரு மாநில அரசியல் குறித்து ஆலோசித்தோம். எங்கள் சந்திப்பிற்கு வேறு எந்த நோக்கமும் இல்லை,'' என்றார்.ஆயினும், இந்த சந்திப்பில் அரசியல் உள்ளதாக சொல்லப்படுகிறது. கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா மீது, ரமேஷ் ஜார்கிஹோளி, பசனகவுடா பாட்டீல் எத்னால் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளனர். இதனால் பா.ஜ.,வில் இரு அணிகள் உருவாகி உள்ளது.சமீபத்தில் கர்நாடகா வந்த, மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால், மாநில தலைவர் மாற்றப்பட மாட்டார் என்று கூறிவிட்டு சென்றார். இது எதிர்கோஷ்டிக்கு ஆதங்கம் ஏற்படுத்தியது. பா.ஜ., மேலிட தலைவர்களுடன் தேவேந்திர பட்னவிஸுக்கு நல்ல தொடர்பு உள்ளது. இதனால் அவர் மூலம், விஜயேந்திராவை மாற்றுவது குறித்தும் ஆலோசித்து இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ