உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவகுமாரை நுழைய விட்டதில்லை மார்தட்டும் ரமேஷ் ஜார்கிஹோளி

சிவகுமாரை நுழைய விட்டதில்லை மார்தட்டும் ரமேஷ் ஜார்கிஹோளி

பெலகாவி: ''நான் பெலகாவி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த போது, சிவகுமாரை மாவட்டத்தில் நுழைய விட்டதில்லை,'' என பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:நான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக, மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த போது, சிவகுமாரை பெலகாவி மாவட்டத்தில் நுழைய விட்டதில்லை. மாவட்ட அரசியல் அதிகாரத்தை, நானே வைத்திருந்தேன்.நான் காங்கிரசில் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, மாநில தலைவராக இருந்தவர் பரமேஸ்வர். பெலகாவியில் காங்கிரஸ் பவன் கட்டப்பட லட்சுமி ஹெப்பால்கர் காரணம் என, மக்களுக்கு சிவகுமார் தவறான தகவல் கூறியுள்ளார். இது குறித்து கேள்வி எழுப்பிய, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியை நான் பாராட்டுகிறேன். நான் உட்பட பலரும் குழுவாக பணியாற்றியதன் பயனாக, பெலகாவியில் காங்கிரஸ் பவன் அமைந்தது.நிலத்தின் உரிமையாளருக்கு இரண்டு கட்டங்களில் பணம் கொடுத்தோம். நானே என் சொந்த பணம் 27 லட்சம் ரூபாய் கொடுத்தேன். நிலம் வாங்கிய பின், கட்டடம் கட்டப்படாமல் இருந்தது. நான் அமைச்சரான பின், 1 கோடி ரூபாய் கொடுத்தேன். மொத்தம் 1.27 கோடி ரூபாய் சொந்த பணம் கொடுத்திருந்தேன்.ஆனால் லட்சுமி ஹெப்பால்கர், 'காங்கிரஸ் பவனை நானே கட்டினேன்' என, கூறி கொள்கிறார். இதை நான் கண்டிக்கிறேன். அலுவலகம் கட்டியதில் எனக்கு முக்கிய பங்குள்ளது. அதன்பின் வந்த நாட்களில், சதீஷ் ஜார்கிஹோளியும் முயற்சி எடுத்து, அலுவலகம் கட்டினார். அலுவலகம் கட்டப்பட்டதில், பெருமளவில் கோல்மால் நடந்துள்ளது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ