உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேகமாக உருகும் பனிப்பாறைகள்; இந்தியாவுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்; வெளியான ஷாக் ரிப்போர்ட்

வேகமாக உருகும் பனிப்பாறைகள்; இந்தியாவுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்; வெளியான ஷாக் ரிப்போர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புவி வெப்பமயமாதலால் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதன் காரணமாக, நீர்நிலைகளின் அளவு விரிவடைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் உள்ள கிளாசியல் ஏரி எனப்படும் பனிப்பாறைகள் உருகுவதால் நீர்நிலைகளின் அளவு கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது 11 சதவீதம் விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலே இதற்கு காரணம் என்றும், இது இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தல் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானால், ஏரிகள் உடைந்து வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால் இமயமலை பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படும் என்றும் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் போலவே அண்டை நாடான சீனாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பனிப்பாறைகள் மாறியுள்ளன. இந்தியாவில் உள்ள பனிப்பாறைகள் உருகியதால் நீர்நிலைகளின் அளவு கடந்த 13 ஆண்டுகளில் 11 சதவீதமாக உள்ள நிலையில், சீனாவில் 40 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது. இந்தியாவை காட்டிலும் சீனாவில் உள்ள ஏரிகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. 2 மிகப்பெரிய ஏரிகள் உள்பட 14 நீர்நிலைகள் 50 ஹெக்டேர் அளவுக்கு விரிவடைந்துள்ளன. புவி வெப்பமயமாதல் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

K.Ayyappan
நவ 10, 2024 20:51

Brilliant. You are next to RG, Malli, Ramesh, Khera... Modi should resign. Hes responsible for the global warming as he directs all the venom from people like you and those listed to the atmosphere to increase the temp. Do you really understood what the context is?


Kasimani Baskaran
நவ 10, 2024 20:30

இதை விட அதிகம் உருகுவது துருவப்பகுதிகளில். பல பகுதிகள் நீரில் மூழ்கும் ஆபத்து உள்ளது. தென் துருவம் உருகும் பொழுது அதன் மறைந்து போன, பனிக்குள் மூழ்கிப்போன பழங்கால உலகம் காணாத தொழில் நுணுக்கம், இயற்கை வளங்களுக்கு பல நாடுகள் போட்டி போடலாம். அதனால் பெரும் போர்கள் கூட வரலாம்.


R SRINIVASAN
நவ 10, 2024 20:13

MR.PRIYAN காங்கிரஸ் 70 ஆண்டுகளில் என்னத்தை சாதித்தார்கள் மக்கள் நலமாக வாழ என்ன செய்யலாம் என்பதை கூறினால் நன்றாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்க அளிக்க வேண்டும் .நதி நீர் இணைப்பு திட்டத்தை அமல் படுத்த வேண்டும். இதைப்போல் பயனுள்ள திட்டங்களை தாங்கள் தெரிவித்தால் நாங்களும் பயனடைவோம்.


Priyan Vadanad
நவ 10, 2024 19:10

இப்ப வரியம்மாவுக்கு மூக்குல வேர்க்குமே.ஆத்துத்தண்ணி வரி, ஊத்துத்தண்ணி வரி, குளத்துத்தண்ணி வரி, குட்டைத்தண்ணி வரி, ஏரித்தண்ணி வரி, அப்படி இப்படின்னு மனசுல ஓடணுமே.


Sathyanarayanan Sathyasekaren
நவ 10, 2024 21:29

பிரியன் வடநாடு கான் ஸ்கேம் காங்கிரஸ் போலி காந்தி கொள்ளை கார குடும்பம் ஆட்சியில் இருந்தபோது வரி காட்டாமல் ஏமாற்றிக்கொண்டு இருந்தாய், அப்படியே காட்டினாலும் வியாபாரிகள் அரசுக்கு செலுத்தாமல் ஏமாற்றிக்கொண்டு இருந்தார்கள், கட்டப்பட்ட கொஞ்சம் வரியையும் ஊழல் செய்து போலி காந்தி குடும்பமும் உங்களை போன்ற அவர்களின் கொத்தடிமைகள் ஊழல் எய்து உங்கள் குடும்பத்திற்கு சோறு போட்டீர்கள். இப்போ வரி நேரடியாக அரசுக்கு சென்று மக்கள், தேச நலனுக்கு உபயோகப்படுவது உங்கள் கொத்தடிமை கண்களுக்கு, மனசுக்கு ஏறவில்லையா?


Priyan Vadanad
நவ 10, 2024 19:03

நீங்க வேற. இது காங்கிரசின் சூழ்ச்சி ஹே.நான் போய் கயிறு கட்டி இழுத்து சீனாவுக்கு திருப்பி விடுவேன் ஹே.


Smba
நவ 10, 2024 18:35

சீனாவுக்கு தேவை தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை