பலாத்கார குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை
கோலார் : கோலாரில், 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கோலாரை சேர்ந்த 16 வயது சிறுமி கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 2023 அக்டோபர் 8ம் தேதி, கோலார் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த ரகு, 23, என்பவரை போலீசார் கைது செய்தனர்.கோலார் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.பி.பிரசாத், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 40 1000, ரூபாய் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.