உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேசன் விநியோக ஊழல்: மேற்குவங்க அமைச்சர் பதவி பறிப்பு

ரேசன் விநியோக ஊழல்: மேற்குவங்க அமைச்சர் பதவி பறிப்பு

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் ரேசன் விநியோகத்திட்டத்தில் நடந்த ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அம்மாநில அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக் பதவி பறிக்கப்பட்டது.மேற்குவங்க மாநில ஆளும் திரிணாமுல் காங்.,முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் தொழிற்சாலை மறுசீரமைப்பு துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மாலிக். முன்னர் உணவு பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது , ரேசன் பொருட்கள் விநியோக திட்டத்தில் பெருமளவு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.இதனை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது.இதில் நடந்துள்ள பண மோசடி வழக்கில் அமைச்சர் ஜோதிப்ரியா வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.கடந்தாண்டு அக்டோபரில் ஜோதிப்ரியா மாலிக் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் நேற்று முதல்வர் மம்தா பானர்ஜி கவர்னருக்கு அளித்த பரிந்துரையின் பேரில் ஜோதிப்ரியா மாலிக் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.அவர் வகித்த இலாகா பிர்பஹா ஹன்ஸ்தாவிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

P.Sekaran
பிப் 17, 2024 09:52

இந்த முடிவு மாதிரி நம் முதலமைச்சர் செந்தில்பாலாஜியை உடனே பதவியிலிருந்து நீக்கியிருந்தால் திராவிட மாடல் ஆட்சியில் நம்பிககை இருக்கும் கவர்னரும் நீதிமன்றமும் குட்டியும் செய்யாததனால் திராவிட மாடல் ஆட்சி மக்களிடம் செல்வாக்கு குறைந்து இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.


Palanisamy Sekar
பிப் 17, 2024 02:09

இந்தி கூட்டணியில் ஒரு கட்சியிலாவது ஊழலில் மாட்டாமல் யோக்கிய கட்சியாக இருக்கின்றதா? மம்தா சிக்கிண்டுவிட்டார், கெஜ்ரிவால் கூட்டாளி கடந்த ஆறுமாதமாக ஊழலில் சிக்கி ஜெயிலில் இருக்கின்றார். கெஜ்ரிவால் புலம்புகின்றார் அமலாக்கத்துறை ஆறுமுறை சம்மன் அனுப்பியும் கூட விசாரணைக்கு செல்ல மறுக்கின்றார். கைது செய்தால் மக்களிடையே அனுதாபம் பெறலாம் என்று காத்திருக்கின்றார்.ஏற்க்கனவே திமுகவின் அமைச்சர்கள் கைதும் தண்டனையும் நாடே துப்புகின்றது. லாலு லாலு மகன் மனைவி என்று ஊழல் முடைநாற்றத்தில் பிகார் மாநிலமே அவர்களை ஒட்டுமொத்தமாய் வெறுத்துவிட்டது. கேரளா சொல்லவே வேண்டாம் முதலமைச்சர் மீதே நேரடியான குற்றச்சாட்டு..அணைத்து திருடர்களுக்கு மோடி மீதுதான் வஞ்சம் வெறுப்பு எல்லாமே. மோடி திரும்ப திரும்ப சொல்வது இதுதான்...அரசியல் திருடர்கள் ஒருபோதும் தப்பிக்க விடவே மாட்டேன். சட்டப்படி அவர்களிடமிருந்து அரசுக்கு சேரவேண்டிய அணைத்து பணத்தையும் மீட்காமலும் விடமாட்டேன் என்று தெளிவாக சொல்லிய நிலையில் ஒவ்வோர் மந்திரியும் கட்சியும் தானே வந்து மாற்றுகின்றது. வெட்கமில்லா இந்தி கூட்டணி..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை