கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும். நாளையும் 50 முதல் 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். எனவே, இன்று முதல் 30ம் தேதி வரையில் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர் ஆகிய 3 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். பத்தினம்திட்டா, கோட்டயம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் மிக கனமழைக்கு (ஆரஞ்ச் அலர்ட்) வாய்ப்புள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழாவில் கன மழை பெய்யும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொச்சியில் இன்று பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையளவு கணக்கீடு1 செ.மீ., மேல் - லேசான மழை2 முதல் 6 செ.மீ., வரை - மிதமான மழை7 முதல் 11 செ.மீ., வரை - கனமழை ( மஞ்சள் அலர்ட்)12 முதல் 20 செ.மீ., வரை - மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்)21 செ.மீ.,க்கு மேல் - அதிகனமழை (ரெட் அலர்ட்)