ஹிமாச்சலில் இன்று ரெட் அலெர்ட்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்யும் நிலையில், மூன்று மாவட்டங்களுக்கு இன்று, 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.ஹிமாச்சல பிரதேசத்தில், ஜூன் 20ல் பருவமழை துவங்கியது. கடந்த சில நாட்களாக இங்கு பலத்த மழை பெய்கிறது. மேக வெடிப்பு, கனமழை உள்ளிட்டவற்றால் பெரும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கனமழையால், மண்டி மாவட்டத்தில் 176 சாலைகள் உட்பட 260 சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுதும் 540 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும், மழை தொடர்பான காரணங்களால் 72 பேர் உயிரிழந்துள்ளனர். கங்க்ரா, சிர்மார், மண்டி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வானிலை மையம் இன்று ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.