உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் பிலிப்பைன்ஸ் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு; ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

டில்லியில் பிலிப்பைன்ஸ் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு; ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுடன் நல்ல உறவை இந்தியா கொண்டுள்ளது. அந்த வகையில், பிலிப்பைன்ஸ் உடனான துாதரக உறவு, 75 ஆண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டியும், இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார்.நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிலிப்பைன்ஸ் அதிபரை நேற்று சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இந்நிலையில், இன்று ஜனாதிபதி மாளிகையில், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.இதை தொடர்ந்து, பிரதமர் மோடியை பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் சந்தித்து பேச உள்ளார். அப்போது இருநாட்டு தலைவர்களும் பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

naranam
ஆக 05, 2025 16:40

டிரம்ப் ஒரு பைத்தியம்..புகழ் விரும்பி புகழ் மயங்கி..மிகுந்த அகம்பாவம் பிடித்தவர்..


vivek
ஆக 05, 2025 16:33

வாங்க மெண்டல்குமாரு


மெடல்குமார்
ஆக 05, 2025 15:42

பிலிப்பைன்ஸ் அதிபருக்கு ஆர்டர் ஆஃப் தி பிரைம் மினிஸ்டர் ஆஃப் தெ ரிபப்ளிக் மெடல் ஏதாவது குடுப்பாங்களா? நாமளே போய் வாங்கிட்டிருந்தா எப்படி?


vivek
ஆக 05, 2025 16:08

நீ மெடல்குமாரா இல்லை மெண்டல்குமாரா


Ramesh Sargam
ஆக 05, 2025 12:22

இதை பார்த்துக்கொண்டிருக்கும் டிரம்ப் இப்பொழுது இந்தியா மீதான வரையை மேலும் ஏற்றுவார். மேலும் பிலிப்பைன்ஸ் நாடு மீது எப்படி, எவ்வளவு வரிவிதிக்கலாம் என்றும் யோசிப்பார். டிரம்ப் ஒரு வரிப்ப யி த் தி ய ம்.


சமீபத்திய செய்தி