உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்; பீஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி

ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்; பீஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் மாநிலம் பூர்னியா என்ற இடத்தில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் உயிரிழந்தனர். ரீல்ஸ் எடுக்க முயன்றபோது ரயில் மோதி 4 பேரும் பலியாகினர்.பீகார் மாநிலம் பூர்னியாவில் வந்தே பாரத் ரயில் முன்பு ரீல்ஸ் எடுக்க 6 பேர் முயற்சி செய்தனர். அப்போது ரயில் மோதி 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rhk3oq3f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஜோக்பானியிலிருந்து பாடலிபுத்ராவுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், அதிகாலை 5:00 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து பாஜ எம்எல்ஏ கிருஷ்ண குமார் ரிஷி கூறியதாவது: இது மிகவும் துயரமானது. துரதிர்ஷ்டவசமாக, ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. அதில் நான்கு பேர் இறந்தனர். இருவர் காயமடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அப்பாவி
அக் 03, 2025 20:36

நாடு முன்னேறணும்னா இதெல்லாம் நடக்கணும்.


Rathna
அக் 03, 2025 19:25

நம்மளை தோற்கடிக்க இன்னொரு மாநிலம் இருக்கிறது என்று ஆறுதல் பட வேண்டியது தான். அங்கே நாலு இங்கே நாற்பது.


Gokul Krishnan
அக் 03, 2025 18:49

இந்த ஜோக்பானி வந்தே பாரத் ரயில் பீகார் தேர்தலுக்காக வந்தது.அதிகாலை 3.25 மணிக்கு புறப்பட்டு 447 கிலோமீட்டர் தொலைவை 8 மணி நேரம் 10 நிமிடம் எடுத்துக் கொள்கிறது.இதே தொலைவை மற்றொரு சாதாரண ரயில் ஆன சிமாச்சல் எக்ஸ்பிரஸ் 8 மணி நேரம் 45 நிமிடம் எடுத்துக் கொள்கிறது. இரண்டுக்கும் இடையே கட்டணம் மிக அதிக வித்தியாசம்.தேர்தலுக்கு முன் எப்படி எல்லாம் மக்கள் ஏமாற்றபடுகிறார்கள்.


ديفيد رافائيل
அக் 03, 2025 17:32

இவனுங்க சாகட்டும். இவனுங்களால ஒரு use ம் இல்லை


ஜெய்ஹிந்த்புரம்
அக் 03, 2025 16:57

நிதிஷ் சார்பில் ஆளுக்கு 10 லட்சம், பிரதமர் சார்பில் 2 லட்சம், விஜய் 20 லட்சம், அதிமுக சார்பில் ரூ ஆயிரம்?


ஜெய்ஹிந்த்புரம்
அக் 03, 2025 16:54

எல்லா இடத்திலும் த.வெ.க வினர் தறுதலை வெட்டி கருமாந்திரங்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.


Rajah
அக் 03, 2025 19:09

ராமசாமி மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லவும். அவரின் பகுத்தறிவு கூடாரத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் சொல்லுங்கள்.


வாய்மையே வெல்லும்
அக் 03, 2025 23:20

திராவிட கருமந்திர புத்தி அப்படி பேசவைக்குது போல இந்த இழிவு பேச்சு பேசுவது அழகல்ல


ஜெய்ஹிந்த்புரம்
அக் 03, 2025 16:51

ரீல்ஸ போடும் இளைஞர் கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுக்கத் தவறிய ரயில்வே துறையை சிபிஐ விசாரிக்க வேண்டும். ரீல்ஸ போடும் இளைஞர் கூட்டத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


என்றும் இந்தியன்
அக் 03, 2025 16:40

பஸ் என்பது வேறு ரயில் என்பது வேறு. ரயில் தண்டவாளத்தின் மீது மட்டுமே செல்லும். 4 பேர் ரயில் மோதி உயிரிழந்தனர் என்றால் அவர்கள் அந்த தண்டவாளத்தின் பகுதிக்குள் இருந்திருந்தால் மட்டுமே இப்படி நடக்கும். ஆகவே தவறு அந்த ஆறு பேர் மீது தான்.


pakalavan
அக் 03, 2025 16:29

டபுல் இன்ஞின்


vijay
அக் 03, 2025 17:49

தண்டவாளத்தில் நின்று ரீலிஸ் எடுத்தால் இப்படித்தான். அதற்காக, நீ மத்திய அரசை குறை கூறுகிறாய். நீ என்ன மாதிரி ஒரு உயிரினம் என்று உன்னையே நினைத்து சுவற்றில் முட்டிக்கொள்.


சாமானியன்
அக் 03, 2025 15:52

அடப்பாவமே ! எப்படியெல்லாம் மக்கட்கு சாவு வருகின்றது ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை