உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் முதல்வர் வேட்பாளராக லாலு மகனை ஏற்க மறுப்பு

பீஹாரில் முதல்வர் வேட்பாளராக லாலு மகனை ஏற்க மறுப்பு

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவை, கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்க ராகுல் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கூட்டணியில் குழப்பம் எழுந்துள்ளது. பீஹார் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவம்பர் 6, 11 ஓட்டு பதிவு தேதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆளும் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி, தேசிய அளவில் 'இண்டி' என்ற பெயரிலும், பீஹாரில் 'மகாகட்பந்தன்' என்ற பெயரிலும் செயல்படுகிறது. தே.ஜ. கூட்டணி மீண்டும் நிதிஷ் குமாரையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகிறது. மகாகட்பந்தன் கூடாரத்தில் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை ஆகிய விஷயங்களில் முரண்பாடு நீடிக்கிறது. இப்போது, முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. டில்லியில் நேற்று காங்கிரஸ் நிர்வாகி உதித் ராஜ் பேட்டி அளித்தார். மகாகட்பந்தன் தரப்பில் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி தானே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு உதித் ராஜ், ''அவர் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முதல்வர் வேட்பாளராக இருக்கலாம். 'இண்டி' கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று காங்கிரஸ் முடிவெடுக்கும்'' என்றார். பீஹாரில் காங்கிரசை விட ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெரிய கட்சி. தமிழகத்தில் எப்படி தி.மு.க.வை சார்ந்து காங்கிரஸ் இயங்குகிறதோ, அப்படி தான் பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை காங்கிரஸ் நம்பியிருக்கிறது. முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை முன்னிறுத்தி ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேர்தல் பணியை துவங்கியுள்ள நிலையில், உதித் ராஜ் இப்படி பேசியிருப்பது கூட்டணியில் புகைச்சலை கிளப்பி உள்ளது. அடுத்த லோக்சபா தேர்தலில், இண்டி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் தான் என தேஜஸ்வி யாதவ் வெளிப்படையாக கூறி வரும் நிலையில், அவரையே முதல்வர் வேட்பாளராக ராகுல் ஏற்காதது, கூட்டணியில் பெரும் சல சலப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ambika. K
அக் 09, 2025 05:46

எல்லா மாநிலங்களிலும் இண்டி கூட்டணி. பீகாரில் மகாகத்பந்தன். ஹை இது நல்லா இருக்கே. தோற்றவுடன் இது மகாகத்பந்தன் தோல்வி இண்டியின் தோல்வி அல்ல என்று மார் தட்டி கொள்ளலாம்.


தாமரை மலர்கிறது
அக் 08, 2025 22:54

ஜெயிக்கபோவதில்லை என்று தெரிந்ததும், பிஹாரில் இண்டி கூட்டணி பணால் ஆகிவிட்டது.


Sridhar
அக் 08, 2025 14:47

வோட் சோரி யாத்திரை நடத்தினவுடன் பப்புவுக்கு ஜிவ்வுனு எகிறிக்கிச்சு. கூட்டணி இல்லாவிட்டாலும் தனியாவே அவர் கட்சி ஜெயிக்கும்ங்கற அளவுக்கு கற்பனை வளர்ந்திருக்கும் போல. அதன் வெளிப்பாடுதான் லல்லு மகனை ஏற்க மறுக்கும் ஆணவம். ஆனா, பீகார் நிலவரம் என்னமோ கருத்துக்கணிப்புகள் படி NDA தான் ஜெயிக்கும் என்றாலும், இரண்டாவது பெரிய கட்சியாக அதிக வாக்கு சதவிகிதத்துடன் இருப்பது லல்லு கட்சிதான். பப்பு தனியாவே நின்று எல்லா தொகுதிகள்லயும் டெபாசிட் இழப்பதை அடுத்த மாதம் பார்க்கும்போது மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கப்போவுது. அதுக்கு அப்புறமும் வோட் சோரி அது இதுனு எடுத்துட்டு வந்தான்னா மக்களே வச்சு செஞ்சுருவாங்க.


Murthy
அக் 08, 2025 11:43

நீயும் வாரிசு அரசியல்........நானும் வாரிசு அரசியல் .......


S.V.Srinivasan
அக் 08, 2025 10:03

சபாஷ் குடுமி பிடி சண்டை ஆரம்பம். பி ஜே பி ஜெயிக்க இவர்களே ரூட் போட்டு கொடுத்துடுவாங்க . நல்லது.


சந்திரன்
அக் 08, 2025 08:37

தோற்கும் கூட்டணிக்கு யார் தலைவரா இருந்தால் என்ன. காங்கிரஸ் கு வந்த சோதனைய பாருங்கள்


G Mahalingam
அக் 08, 2025 08:36

தோல்வி உறுதி. காங்கிரஸ் தனியாக நிற்க வேண்டும். எவ்வளவு வருடம் மாநி


திகழ் ஓவியன், Ajax Ontario
அக் 08, 2025 07:59

ஓட்டு திருட்டு அப்டின்னு ஒரு பீட்ட போட்டாச்சு. தோற்றவுடன் EVM மேலையும் பழியை போட்டு அவியல் செய்யலாம்


mohana sundaram
அக் 08, 2025 08:54

சேம் சைடு கோலா?


Iyer
அக் 08, 2025 07:16

நிலவும் SITUATIONஐ பார்த்தால் - பிஜேபி கூட்டணி 2/3 MAJORITY ல் அரசு அமைக்கும் போல் தோன்றுகிறது. ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற பிஜேபி அலை - கண்கூடாக தெரிகிறது. ஆகையால் எதிர்கட்சிகள் முதல்வர் வேட்பாளர் அறிவிக்க தேவையில்லை. அறிவித்தாலும் பயன் இல்லை.


ramani
அக் 08, 2025 06:46

இந்தி கூட்டணி தோற்பது உறுதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை