உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம்: அமைச்சர் உறுதி

நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம்: அமைச்சர் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விலைவாசி உயர்வு அதிகரித்து வரும் நிலையில், நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறிது நிவாரணம் வழங்கும்படி, சமூக வலைதளத்தில் ஒருவர் கோரிக்கை விடுத்தார். 'உங்களுடைய ஆலோசனைகளை அரசு கவனிக்கும்' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.விலைவாசி உயர்ந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் சில்லரை பணவீக்கம், 6.21 சதவீதமாக இருந்தது. இதுபோல, உணவுப் பொருட்களுக்கான விலை செப்.,ல் 9.24 சதவீதமாக இருந்து, கடந்த மாதம் 10.87 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்நிலையில், சமூக வலைதளத்தில், துஷார் சர்மா என்பவர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.'நாட்டுக்காக உங்களுடைய பங்களிப்பு மற்றும் முயற்சிகளை வெகுவாக பாராட்டுகிறோம். நீங்கள் எங்களுடைய மரியாதையை பெற்றுள்ளீர்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறிது நிவாரணம் அளிக்கும்படி உங்களை தாழ்மையுடன் கேட்கிறேன்.'இது சற்று சவாலானது என்பது தெரிந்தபோதும், இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறேன்' என, துஷார் சர்மா பதிவிட்டிருந்தார்.இதற்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பதில்:உங்களுடைய கனிவான வார்த்தைகள் மற்றும் புரிதல்களுக்கு மிகவும் நன்றி. உங்கள் கவலையை புரிந்து கொண்டுள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசு, மிகவும் பொறுப்பான அரசு. மக்களின் குரல்களை கேட்டு, அதற்கு பதிலளிக்கக் கூடியது. உங்களுடைய புரிதல்களுக்கு மீண்டும் நன்றி. உங்களுடைய ஆலோசனைகள் மதிப்புமிக்கவை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

karutthu kandhasamy
நவ 30, 2024 17:25

துஷார் சர்மா கேட்பது சரிதான் நானும் அவரின் கருத்துக்கு உடன்படுகிறேன் நானும் நிர்மலா அம்மையாருக்கு ஒரு சாதாரண கடிதத்தின் மூலம் தமிழில் கடிதம் அனுப்பியிருந்தேன் .ஆனால் அதற்கு ஒரு acknoledgement கூட வரவில்லை 72 வயதான எங்களால் எந்த வேலையும் செய்ய முடியாது இதை தினமலர் பத்திரிக்கை அவர்களுக்கு ஒரு அழுத்தம் கொடுத்தால் நல்லது தினமலரின் உதவி தேவை தினமலர் இந்த உதவியை செய்தால் நிறைய குடும்பங்கள் தினமலருக்கு நன்றியுடன் இருப்பார்கள்


theruvasagan
நவ 18, 2024 08:48

உங்கள் கோரிக்கை கவனிக்கப்படும் என்று சொல்லியிருக்காரே. அய்யய்யோ. இப்ப என்னத்த உருவப் போறாரோன்னு நெனைச்சாலே வயித்தக் கலக்குதே.


Indian
நவ 18, 2024 08:46

நடுத்தர வர்க்கத்துக்கு அதிக வரி தான் கிடைக்கும் ..வேறு ஒரு நிவாரணமும் கிடைக்காது ....நம்பி ஏமாற வேண்டாம் ..


சாண்டில்யன்
டிச 02, 2024 13:55

சர்மாக்களுக்கு உதவுவார்


Oviya Vijay
நவ 18, 2024 07:48

இந்தியா இதுவரை கண்டிராத ஒரு மோசமான நிதியமைச்சர் எனில் அது நிம்மி மம்மி தான்... மக்களை சந்தித்து ஓட்டு பெற்று பதவிக்கு வராமல் ராஜ்யசபா எம்பி என்னும் பின்வாசல் வழியாக பதவியை பெற்று இவர் போடும் ஆட்டமும் இவரது ஆணவப் பேச்சுக்களும் கொஞ்ச நஞ்சமல்ல... இந்தியாவில் எந்த தொகுதியில் இவர் தேர்தலில் நின்றாலும் இவரால் ஜெயிக்க முடியாது என்பது தெரியும் இவர்களுக்கு. இவரது அகங்காரம் அடங்கும் விரைவில்...


karutthu kandhasamy
நவ 26, 2024 21:59

ஒரு மதிப்பிற்குரிய தலைவரை மம்மி நிம்மி என கிண்டல் செய்வாயா ? அவங்களுக்கு உள்ள மதிப்பில் உனக்கு கால் தூசி கூட கிடையாது நீ அவங்களை நக்கல் செய்கிறாயா ? BHEL, NLC, BPCL, IOC, HPCL, OIL ONGC போன்ற மகா ரத்னா பொதுத்துறை நிறுவனங்களுக்கு பென்ஷன் 1800 PM தான் கிடைக்கிறது. ஆனால் 2016 க்கு பிறகு ஒய்வு பெற்றால் ரூ. 7500 மாதா மாதம் கிடைக்கும் நீங்களாவது எங்களுக்கு ரூ 7500/ மாதா மாதம் கிடைக்க உதவி செய்ய வேண்டும்


Duruvesan
நவ 18, 2024 07:24

இந்த ஆட்சி இன்னும் பத்து வருஷம் இருந்தால் நடுத்தர மக்கள் அதர பாதாளம் செல்வது உறுதி


R.RAMACHANDRAN
நவ 18, 2024 07:12

பிராமணர்கள் கோரிக்கைகளுக்கு மட்டுமே தீர்வு.


Duruvesan
நவ 18, 2024 07:05

நடுத்தரம் இன்னும் வரி போடவா?


அப்பாவி
நவ 18, 2024 01:06

மேலே இருக்குறவங்களை தொட முடியாது. கீழே இருக்குறவங்க கிட்டே உருவ ஒண்ணுமில்லை. தெரிஞ்சுமா நடுத்தர ஆளு நிவாரணம் கேக்குறாரு? அப்ராணியா இருக்காரே.


முக்கிய வீடியோ