உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபாவில் செங்கோலை அகற்ற வேண்டும்: சமாஜ்வாதி எம்.பி., வலியுறுத்தல்

லோக்சபாவில் செங்கோலை அகற்ற வேண்டும்: சமாஜ்வாதி எம்.பி., வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''லோக்சபாவில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்'' என சமாஜ்வாதி எம்.பி., ஆர்.கே.சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.புதிய பார்லிமென்ட் கட்டடத்தை கடந்தாண்டு மே 28ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அன்றைய தினம், 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோலை லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார் பிரதமர் மோடி. அப்போது, ''நேர்மை, நீதிக்கு ஒரு அடையாளமாக செங்கோல் திகழ்ந்தது; செங்கோல் என்பது ஒரு அதிகார மாற்றத்தின் அடையாளம்'' என பிரதமர் மோடி பேசியிருந்தார்.தற்போது 18வது லோக்சபா தேர்தல் முடிந்து பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்றுள்ளார். நேற்று (ஜூன் 26) நடந்த சபாநாயகர் தேர்தலில் 2வது முறையாக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஆர்.கே.சவுத்ரி, லோக்சபாவில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் கூறியதாவது: சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். பார்லிமென்ட் என்பது ஜனநாயகத்தின் கோவில்; அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல். செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும். இவ்வாறு ஆர்.கே.சவுத்ரி கூறினார். அவரது கருத்தில் எந்த தவறும் இல்லை எனக் கூறியுள்ள காங்கிரஸ், செங்கோலை அகற்றுவது தொடர்பான சவுத்ரியின் கருத்தை ஆதரித்துள்ளது.

கோரிக்கை நிராகரிப்பு

செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி., சவுத்ரி விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

kumarkv
ஜூன் 30, 2024 09:34

நீ வேண்டுமானால் வாங்கி ...


Vijayakumar Srinivasan
ஜூன் 30, 2024 03:40

இவர்க்கு.இதன்மாண்பை.40ல் 1 புரியவைத்தால் நல்லது


SARAVANAN A
ஜூன் 29, 2024 18:11

செங்கோல் முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளம் என்று யார் சொன்னது? ஆள்வோர்க்கு, அது எந்த வகையான அரசாக இருந்தாலும், முடியாட்சி அல்லது மக்களாட்சி எதுவாயினும் நீதி வழுவாமல், நேர்மை பிறழாமல் நல்லாட்சி நல்குவதே ஆள்வோரின் கடமை. அரசு பரிபாலன மகத்துவத்தை உணர்த்துவதே செங்கோல் தத்துவம் ஒரு கோலை சாதாரண மாக நிறுத்தினால் ஏதாவது ஒரு பக்கம் சாயவே செய்யும். அவ்வாறு இல்லாமல் எந்த பக்கமும் சாயாது சீராக நின்றால் எப்படியோ ஆட்சியும் அவ்வாறு அமைந்திடல் வேண்டும் என்பதே செங்கோல் என்பதின் அர்த்தம் இதை உணர்ந்தே பிரதமர் மோடி செங்கோலை பாராளுமன்ற அவையில் நிறுவியுள்ளார். இப்படிப்பட்ட உயர்ந்த செங்கோலை எதிர்கட்சிகள் அகற்ற சொல்வதில் வியப்பொன்றும் இல்லையே


M Ramachandran
ஜூன் 29, 2024 10:33

தமிழக பாரம்பரியத்திற்கு ஆபத்து ஸ்டாலின் அரசு கவனத்தில் கொள்ளுமா


prathab
ஜூன் 29, 2024 10:06

நேரு தான் வாங்குனதே முதல்லே அத கொண்டு மீசியம்ல கொண்டு போட்டு வச்சிருக்கானுங்க மோடி தானே வந்து இருக்க வேண்டிய இடத்தில வச்சிருக்காரு காங்கிராஸ் எல்லாவனும் அடுக்கு கொண்டாடணும்


konanki
ஜூன் 28, 2024 22:57

இவர் இதை பேசும் போது 40 ம் கேண்டீனில் வடை சாப்பிட போயிடுச்சா? இவர் கருத்துக்கு 40 ம் ஆதரவா அல்லது எதிர்ப்பா?


karutthu
ஜூன் 28, 2024 18:44

அந்த செங்கோலை எடுத்து விட்டு அங்கே சௌத்திரி யின் படத்தை வைத்து விடலாமா ? செங்கோல் என்றால் என்னவென்று சௌதுரிக்கு புரியவையுங்கள் .அப்படியே சிலப்பதிகாரத்தையும் படிக்கச்சொல்லுங்கள்


Sivasankaran Kannan
ஜூன் 28, 2024 09:00

நேர்மை என்றால் பிடிக்காத புள்ளி கரப்பான்கள்..


தமிழ்வேள்
ஜூன் 27, 2024 20:08

அண்ணாதுரை கருணாநிதி ராமசாமி செங்கோல் எதற்கு உபயோகப்பட்டது? திராவிட கும்பலோடு சேர்ந்ததில் முலாயம்சிங் கும்பலின் மூளை விளங்காமல் போய் விட்டது


Bhaskaran
ஜூன் 27, 2024 19:22

பெரியார் கைத்தடிவைக்கலாம்னு சொல்வார்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை