மேலும் செய்திகள்
கர்நாடகாவில் 4 இடத்தில் நீர் விமான நிலையங்கள்
11-Mar-2025
பெங்களூரு: பெங்களூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, அரசு மூன்று இடங்களை அடையாளம் கண்டு உள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.பெங்களூரு தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. உலகில் உள்ள பரபரப்பான விமான நிலையங்களில், இந்த விமான நிலையமும் ஒன்று. கடந்த 2024ம் ஆண்டில், இந்த விமான நிலையத்தை 4 கோடி பயணியர் பயன்படுத்தி இருந்தனர். கடும் நெரிசல்
வரும் ஆண்டுகளில் விமான நிலையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதால், பெங்களூரு அருகே புதிதாக 2வது விமான நிலையம் அமைக்க, கர்நாடக அரசின் தொழில் துறை முடிவு செய்தது. புதிய விமான நிலையத்திற்கான இடத்தை அடையாளம் காணும் பணியை, 'ஐடெக்' என்ற தனியார் நிறுவனத்திடம் அரசு ஒப்படைத்து இருந்தது. அந்த நிறுவனம் தொழில்நுட்ப சாத்தியக்கூறு, சாலை, மெட்ரோ இணைப்பு ஆகிய வசதிகள் கிடைக்கும் வகையிலான இடங்களை தேடியது. இந்நிலையில், கனகபுரா சாலையில் இரண்டு இடங்கள்; நெலமங்களா - குனிகல் இடையில் சோலுாரில் ஒரு இடத்தை அடையாளம் கண்டு, சமீபத்தில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம், கர்நாடக அரசு சமர்ப்பித்து உள்ளது. 10 கோடி பயணியர்
ஆண்டுக்கு 100 மில்லியன் அதாவது 10 கோடி பயணியரை கையாளும் வகையில், புதிய விமான நிலையம் கட்டப்பட உள்ளது. பொதுவாக ஒரு விமான நிலைய கட்டுமான பணிக்கு 4,500 முதல் 5,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தங்களது நிலமாக இருந்தால் கட்டுமான செலவு குறையும் என்பது அரசின் எண்ணமாக உள்ளது.தற்போது, மாநில அரசு சமர்ப்பித்து உள்ள அறிக்கையை, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு செய்யும். பின், விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மூன்று இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்வர். ஏதாவது ஒரு இடத்தை இறுதி செய்து, மாநில அரசுக்கு தகவல் கொடுப்பர். பின், அந்த இடத்தில் விமான நிலையத்தை கட்டுவதற்கான சாத்தியகூறுகளை அரசு ஆய்வு செய்யும். செலவு தொகையை மதிப்பிடும். பின், அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இதையடுத்து விமான நிலைய கட்டுமான பணிகள் துவங்கும்.
11-Mar-2025