உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 11வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

11வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகித்தில் மாற்றமில்லை. 6.5 சதவீதம் ஆகவே தொடரும்' என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.ரெப்போ விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ வட்டி விகிதத்தில், 11வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை. இது குறித்து மும்பையில் நிருபர்கள் சந்திப்பில் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகித்தில் மாற்றமில்லை. 6.5 சதவீதம் ஆகவே தொடரும். 11வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை. பணவீக்க விகிதம் உயர்வு, பொருளாதார வளர்ச்சி குறைந்தது போன்ற காரணங்களால் வட்டி மாற்றமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றாமல் 6.5 சதவீதமாகவே வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
டிச 07, 2024 06:52

CRR ஐக்.குறைப்பதால் யாருக்கு லம்? பொதுத்துறை வங்கிகள் CRR ஐக் குறைச்சுக்காட்டி மீதமாகும் பணத்தை SBI, HDFC போன்ற வங்கிகள் லாபமாகக் காட்டிக்கொள்ளும். பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் குடுக்கும். மக்களுக்கு ஒரு லாபமும் கிடையாது. வங்கிதில் டிபாடி வெச்சிருக்கறதை விட வங்கி பங்குகளை வாங்கிப் போடலாம். கெவர்மெண்ட் வங்கிகளை திவாலாக விடாது. அதுவும் too big to fail ங்கற ஐந்து வங்கி பங்குகளை மட்டும் வாங்குங்கள்.


hari
டிச 07, 2024 10:05

என்ன திமிங்கலம்.....CRR என்னமோ சொல்ற.... அவளோ அறிவோ உனக்கு கோபால்...சொல்லுங்க கோபால்


அப்பாவி
டிச 07, 2024 05:16

பொருளாதாரம் சூப்பரா போய்க்கிட்டிருக்கு. ஆனாலும் CRR ஐக் குறைக்கிறோம். மூணு மாசத்தில் இன்னும் வளந்திச்சுன்னாலும் வளரலேன்னாலும் இது நாங்கள் எதிர்பார்த்ததுதான்ந்னு சொல்லிடுவோம். வளந்திச்சுன்னா ஜீக்கு மெடல். வளரெலேன்னா நேருதான் காரணம் இல்லே இது இண்டர்நேஷனல், அமெரிக்காவோட சதின்னு சொல்லிருவோம்.


ஆரூர் ரங்
டிச 06, 2024 14:17

இரண்டாண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் மழை நேரத்தில் பெய்யாமலும் அறுவடை நேரத்தில் அதிகமாக பெய்தும் விவசாயத்தை பெருமளவு பாதித்துள்ளது. இரண்டு போர்களாலும் எல்லா நாடுகளின் பொருளாதாரமும் ஆட்டம் கண்டு நமது ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள காலத்தில் எதிர்பார்த்த வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படவே செய்யும். இருந்தாலும் உலகம் முழுவதும் உள்ளதை விட இங்கு வளர்ச்சி அமோகமே.


அப்பாவி
டிச 06, 2024 12:17

போன மீட்டிங்கில் பொருளாதாரம் செம வளர்ச்சி பெறும்னு அடிச்சி உட்டவர். இந்த முறை நாங்க எதிர்பார்த்தபடியே பொருளாதார வளர்ச்சி நாங்க எதிர்பார்த்த படியே குறைஞ்சிருக்குன்னு பேசுறாரு. என்ன ஒரு அறிவாளித்தனம். போன தடவை பேசுனதை எல்லோரும் மறந்திருப்பாங்கண்னு நம்பிக்கை. இந்த அப்பாவி எதையும்.மறக்கமாட்டான்.


ghee
டிச 06, 2024 16:55

நீட் வாக்குறுதி என்னாச்சு?? கோமா நிலைக்கு செல்லாமல் பதில் சொல்லவும்...


நாயக்
டிச 06, 2024 17:19

அது வேற வாயி. மூடிக்க அப்பு


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 06, 2024 11:06

இதே படபடப்பில் இருந்திருப்பார் போலிருக்கு... போனவாரம் சென்னையில் அட்மிட் ஆனாரே ....


முக்கிய வீடியோ