உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துப்புரவு தொழிலாளர்களுக்கு 42 இடங்களில் ஓய்வறை

துப்புரவு தொழிலாளர்களுக்கு 42 இடங்களில் ஓய்வறை

பெங்களூரு; துப்புரவு தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் நோக்கில், பெங்களூரின் 42 இடங்களில் நிரந்தர அறைகள் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியதாவது:துப்புரவு தொழிலாளர்கள் ஓய்வு எடுக்க, தேவையான வசதி செய்து தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதன்படி இவர்கள் ஓய்வு எடுக்க வசதியாக, பெங்களூரின் 42 இடங்களில் புதிதாக அறைகள் கட்டப்படும்.விரைவில் கட்டுமான பணிகள் துவக்கப்படும். இந்த அறைகளில் துப்புரவு தொழிலாளர்கள் ஓய்வு எடுக்க, வாய்ப்பு அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வறைகளில் துப்புரவு தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் இருக்கும்.கமர்ஷியல் ஸ்ட்ரீட், பிரிகேட் சாலையில், பே அண்ட் பார்க் டெண்டர் முடிவாகியுள்ளது. வாகன உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. டெண்டர் முடிவு செய்வதற்கு முன்பே, யாராவது கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை