உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பதிலடி: காஷ்மீர் துணை நிலை கவர்னர் உறுதி!

சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பதிலடி: காஷ்மீர் துணை நிலை கவர்னர் உறுதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் தகுந்த பதிலடி தருவோம் என துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கூறினார்.எல்லைப் பாதுகாப்புப் படை விழாவில் மனோஜ் சின்ஹா மேலும் பேசியதாவது:ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் தனது நாசகர செயலை தொடர்கிறது.வறுமை மற்றும் பசியால் குடிமக்களை துன்புறுத்துவது மட்டுமில்லாமல், பயங்கரவாதத்தை ஆதரிப்பது, போதைப்பொருள் கடத்தல் போன்ற செயல்களை தொடர்ந்து செய்கிறது.கந்தர்பால் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் உள்ள எங்கள் துணிச்சலான வீரர்கள், பொதுமக்கள், உள்கட்டமைப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து வந்த சில தொழிலாளர்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.காஷ்மீரில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் நமது பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுப்பர். பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி, குடிமக்கள் தங்கள் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நனவாக்கும் சூழலை உருவாக்குவதே பாதுகாப்புப் படைகளின் நோக்கம்.பயங்கரவாதத்திற்கு உதவுபவர்களுக்கு எதிராக முன்மாதிரியான நடவடிக்கை எடுப்பதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கிறோம்.இவ்வாறு மனோஜ் சின்ஹா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
அக் 27, 2024 13:00

சமீபத்தில் அண்டைநாடு பிரதமர் வீர ஆவேசமாக பேசி தங்களையால் மைக் வைத்திருக்கும் மேஜையை அடித்து நம் மக்களுக்காக வாக்காளத்துவங்கி பேசியதைக்கேட்டு உலகநாட்டு பிரநிதிகள் கைதட்டி வீடியோவைக்காணலாம் வெடியோவைக்காணலாம் அதற்க்கு பதிலடியாக நமது வெளியுறவு அமைச்சர் கையில் எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் மிக அழகாக பேசியது பாராட்டப்பட வேண்டும், மேலும் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து வெளியேறுங்கள் என்று வீரமுழக்கம் மெய்சிலிர்க்கவைத்தது. அன்று சுதந்திரத்துக்காக ஒரே குடும்பமாக இருந்து, வாழ்ந்து தியாகம் செய்தவர்கள் தவறான பாதையில் சென்று, தனியாக சுதந்திரமாக வாழவேண்டும் என்று சென்றபின்பு பெற்ற சுதந்திரத்தை வைத்துக்கொண்டு தன்னாட்டு மக்கள், மற்றும் தொழில்வளர்ச்சி என்று கவனத்தை செலுத்தாமல், பெற்றதாய் மற்றும் ஒன்றாக வாழ்ந்த சமூகத்தை முழுநேர தொழிலாகக் கொண்டு செயல்படுவது, ஆளும் கட்சிகள் எதிர்க்கட்சி தலைவருக்கு சூன்னியம் வைப்பதிலேயே கவனம் செலுத்தி, பணத்தை வாரி இறைத்து செலவு கஜானா காலியாவது போல், எதிர்க்கட்சிகளும் அதேபோல் ஆளும்கட்சியை வேரோடு ஒழிக்கவேண்டும் என்று சூன்னியம் செய்ய அதைவிட செலவு செய்து மொத்தத்தில் இரண்டுமே மரித்துப்போவது போல்தான் இருக்கிறது, மக்கள் வரிப்பணத்தில் நீயா நானா என்று ஒருவருக்கொருவர் வேண்டாத இந்த தீய சக்திகளில் ஈடுபடுவதும் அதை அழிக்க மற்றொருவர் மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்வது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது . தீவிரவாதம் , தீயசக்திகள் , கொலை, கொள்ளை, இவைகளுக்கு ஒரு முடிவே வராதா என்று மக்கள் ஏங்கிக்கொண்டே பல கலைமுறைகள் சென்றுவிட்டது, என்றைக்கு விடிவு கிடைக்கும் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தபடி காத்திருக்கிறோம், வந்தே மாதரம்


Ramesh Sargam
அக் 26, 2024 22:25

பதிலடி கொடுக்கவேண்டும். பாரத் மாதா கி ஜெய்.


முக்கிய வீடியோ