உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மன்மோகன் சிங்... ராஜ்யசபா எம்.பி.,... அரசியலுக்கு வந்தது எப்படி?

மன்மோகன் சிங்... ராஜ்யசபா எம்.பி.,... அரசியலுக்கு வந்தது எப்படி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஜ்யசபா எம்.பி.,

நாட்டின் பிரதமராக இரண்டு முறை இருந்தவர் மன்மோகன் சிங். ஜவஹர்லால் நேருவுக்கு பின், முழு ஆட்சி காலத்தை நிறைவு செய்த பின், மீண்டும்பிரதமரானவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். நேரு, இந்திரா, நரேந்திரமோடிக்குப் பின், நீண்ட கால பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. பொருளாதார நிபுணராக இருந்து, அரசியலுக்கு வந்த அவர், ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த, 1991 - 2019 வரை அசாமில் இருந்தும், 2019 - 2024 வரை ராஜஸ்தானில் இருந்தும் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் லோக்சபா தேர்தலில், ஒருமுறை கூட போட்டியிட்டதில்லை.

அரசியலுக்கு வந்தது எப்படி?

தான் அரசியலுக்கு வந்தது தொடர்பாக, 2005ல் பிரிட்டன் பத்திரிகையாளர் மார்க் டுல்லிக்கு அளித்த பேட்டியில், மன்மோகன் சிங் கூறியதாவது:கடந்த, 1991 ஜூன் மாதம், காங்கிரசின் நரசிம்ம ராவ் பிரதமராக பதவியேற்றபோது, என்னை நிதி அமைச்சராக தேர்வு செய்தார். இந்தத் தகவலை எனக்கு தெரிவிக்க, முதன்மை செயலரை அனுப்பியிருந்தார். ஆனால், அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கடுத்த நாள் காலையில், நரசிம்ம ராவே என்னை அழைத்தார். நல்ல உடை அணிந்து, உடனே ஜனாதிபதி மாளிகைக்கு வரும்படி கூறினார். இப்படித்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.இவ்வாறு மன்மோகன் சிங் கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை