உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியுரிமை பறிபோகும் அபாயம்

குடியுரிமை பறிபோகும் அபாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூரில் மா.கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேட்டி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்காக, தேர்தல் ஆணையம் அளித்த காலக்கெடு குறைவு. தேர்தல் ஆணையம் 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை, அளவுகோலாக கொண்டுள்ளது.தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், ஒரே மாதத்தில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள முடியாது. இதனால், 20 லிருந்து 30 சதவீதம் வாக்காளர்கள் ஓட்டளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவர். இதனால், குடியுரிமை பறிபோகும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக, மா.கம்யூ., சார்பாக தமிழகம் முழுதும் கண்டன இயக்கம் நடத்தப்படும்.தமிழகத்தில் கனிமவள கொள்ளையை எதிர்த்து யார் பேசினாலும், அவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. கனிமவள கொள்ளை, பெரிய அரசியல் செல்வாக்குடன் தமிழகத்தில் நடக்கிறது. அறப்போர் இயக்கம் கருத்துகேட்பு கூட்டத்தில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் நேரு உண்மையிலேயே ஊழல் செய்திருந்தால் விசாரிக்கலாம். தேர்தல் நேரத்தில், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், அமலாக்கத் துறையை வைத்து வழக்குப்பதிவு, கைது என பா.ஜ., முயற்சிக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி, மக்களிடம் தங்களுக்கு ஆதரவை தேடும் தகிடுதத்தம் வேலை இது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Rathna
நவ 04, 2025 18:36

கையாலாகதவன் உண்டியல் குலுக்கி.


KRISHNAN R
நவ 04, 2025 18:31

சிறப்பான செய்திகள்


Rajasekar Jayaraman
நவ 04, 2025 17:59

அந்நிய கைக்கூலி தேச விரோத பொறம்போக்கு.


Ramalingam Shanmugam
நவ 04, 2025 17:49

டுபுக்கு என்ன பெட்டி வந்துச்சா


panneer selvam
நவ 04, 2025 16:01

What a pity once a communist means well educated , thoroughly read and excellent orator but nowadays our Tamil communist leaders are be like illiterate , uneducated and ignorant of Indian laws. Our Arivalayam fed poor Communist leaders should know, as per Indian constitution , no one has the right to strip off the Indian citizenship of any India born Indian under any reason and under any circumstances .


Iyer
நவ 04, 2025 14:07

6 கோடி மக்கள் தொகை இருந்தாலும் - BOOTH LEVEL ல் அங்கங்கெ ஆங்காங்கே - SIMULTANEOUS ஆக அலுவலர்கள் செல்வதால் -1 மாதத்திற்குள் இந்த பணியை செவ்வனே முடிக்கலாம். சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் ஓட்டுரிமையையும் இழப்பார்கள், குடியுரிமையும் இழப்பார்கள். இறந்தவர்களின் பெயரில் கள்ள வோட்டு இடும் வொட்டார்கள் ஓட்டுரிமையை இழப்பார்கள். தன் சொந்த ஊரிலும், தான் வேலை செய்யும் இடத்திலும் - கள்ளத்தனமாக வோட்டு செய்பவர்கள் ஏதாவது ஒரு இடத்தில ஓட்டுரிமையை இழப்பார்கள்.


Raghavan
நவ 04, 2025 13:01

குடிஉரிமைக்கும் வாக்குரிமைக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு பொட்டி வாங்கியக்கட்சி விடியா மாடலுடன் சேர்ந்து ஒத்து ஊதுகிறது ஒன்று அல்லது இரண்டு சட்டசபை சீட்டுக்கு.


JAYACHANDRAN RAMAKRISHNAN
நவ 04, 2025 11:19

கம்யூனிஸ்ட்கள் திமுக குடும்பத்தினரின் வேலைக்காரர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.


கண்ணன்
நவ 04, 2025 11:11

முதலில் பள்ளிப் படிப்பையாவது இவரும் இவரது கட்சியினரும் முடித்துவிட்டு வந்தால் நல்லது


jayaram
நவ 04, 2025 10:33

ஒரு வேளை இதை ஒத்து கொள்கிறார்கள் என்றால் அப்போது சொல்வார்கள் இப்ப என்ன அவசரம் இன்னும் ஐந்து வருடம் இருக்கிறது என்பார்கள் அலை எப்போது ஓய்வது கடலில் எப்போது இறங்குவது? என்ன ஒரு மடமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை