உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்ன பேசி என்ன பிரயோஜனம்... ஹரியானா ரிசல்ட் பற்றி புலம்பும் லாலு மகன்

என்ன பேசி என்ன பிரயோஜனம்... ஹரியானா ரிசல்ட் பற்றி புலம்பும் லாலு மகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா; ஹரியானா தேர்தல் முடிவுகள் ஆச்சரியம் அளிப்பதாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார். ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ., 3வது முறையாக வென்று ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் வெற்றியை பா.ஜ., மற்றும் அதன் தொண்டர்கள் கொண்டாடி வரும் வேளையில் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீது புகார் கூறி வருகின்றன.இந்நிலையில், ஹரியானா தேர்தல் முடிவுகள் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார். பாட்னாவில் அவர் நிருபர்களிடம் பேசும் போது கூறியதாவது; ஹரியானாவில் இத்தகைய ஒரு சூழல் வரும் என்று நினைக்கவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் தேர்தல் முடிவை கண்டு ஆச்சரியப்படுகிறோம். பா.ஜ., தலைவர்கள், தொண்டர்கள் கூட தொடக்கம் முதலே நம்பிக்கையுடன் காணப்படவில்லை.அவசியம் இருப்பின், கூட்டணிக்கட்சிகள் உதவியுடன் ஆட்சி அமைப்போம் என்று முதல்வர் சைனி கூட கூறி இருந்தார். அவரின் உடல்மொழி கூட உறுதியுடன் இல்லை. தேர்தல் முடிவு எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் தலைவர்கள் என்னதான் நினைத்தாலும் மக்கள் தான் முதலாளிகள். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Lion Drsekar
அக் 09, 2024 19:44

கைது என்றால் கிட்னி பிரச்சனை வயது மூப்பு என்று கூறும் வாரிசா வந்தே மாதரம்


Rasheel
அக் 09, 2024 11:53

வகை வகையா ஊழல் செய்த குடும்பம் பேசுவது கேவலம்.


SRIDHAAR.R
அக் 09, 2024 11:13

மக்கள் எதை சொன்னாலும் ஏற்பார்கள் என நினைக்கும் அரசியலில் பெரிய இடி


HoneyBee
அக் 09, 2024 09:24

மக்கள் தான் முதலாளிகள் என்று இப்ப தான் புரியுதா தேஜு... இனி ஊழல் பெருச்சாளிகள் சந்து தேடி பதுங்கி கொள்ளும்


நிக்கோல்தாம்சன்
அக் 09, 2024 08:50

உருளைக்கிழங்கு ஒன்று உடல் மொழியை பற்றி பேசுவது ஆச்சரியம்


VENKATASUBRAMANIAN
அக் 09, 2024 08:33

காஷ்மீரில் இரண்டு சீட் வாங்கிய காங்கிரஸ் குதிக்கிறது. 29சீட் வாங்கிய பாஜக அமைதியுடன் உள்ளது. காங்கிஸ்காரர்களுக்கு வெட்கமே இல்லை. இதற்கு திமுக முட்டு கொடுக்கிறது


vadivelu
அக் 09, 2024 08:32

தேர்தலை முடிவுகளை தீர்மானிப்பது மக்கள் காட்டும் இல்லை, மகேசனும் கூட.


Mohan
அக் 09, 2024 08:03

அட்லீஸ்ட் தேஜஸ்வி லாலு ஒருவராவது மக்கள் தான் முதலாளிகள் என்று பேசியிருப்பது அவருக்கு தெளிவு பிறக்க தொடங்கியுள்ளதை காட்டுகிறது. அவர் இதே தெளிவுடன் உண்மையாக மக்களுக்காக உழைக்க ஆரம்பித்தால், அவரது கட்சி மறுபடி செல்வாக்கு பெற இயலும். அதற்கு அவர் முதலில் துணிந்து இண்டி கூட்டணியிலிருந்து விலக வேண்டும். எனென்றால் விதிமுறையற்று இஷ்டம் போல பேசும் ராகுல் காந்தியின் செயல்கள் தேஜஸ்வியை கவிழ்த்து அட்ரஸ் இல்லாமல் ஆக்கிவிடும். உஷாரய்யா உஷாரு...


கண்ணன்
அக் 09, 2024 08:02

மக்கள் திருடர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளத் துவங்கிவிட்டனர்


பேசும் தமிழன்
அக் 09, 2024 07:28

மக்கள் உங்களை நம்பவில்லை..... நாட்டு மக்கள் பிஜெபி மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது


புதிய வீடியோ