உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரோகித் நம்பர் 1... கோலி நம்பர் 2.... ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் அசத்தல்

ரோகித் நம்பர் 1... கோலி நம்பர் 2.... ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் அசத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முதல் இரு இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளனர்.டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் பங்கேற்ற ஆஸ்திரேலியா தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. அதன்பிறகு, சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவை 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த இரு தொடர்களில் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, விராட் கோலி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் 2 சதம் உள்பட 302 ரன்கள் குவித்தார். இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசைப்பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில், பேட்டர்களுக்கான தரவரிசையில் ரோகித் ஷர்மா முதலிடத்தில் உள்ளார். கோலி இரு இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் கில் 5வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல, அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2027ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியும், இந்திய வீரர்களும் பார்மில் இருந்து, கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை