உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியர்களிடம் ரூ.100 கோடி மோசடி: டில்லியில் சீனர் கைது

இந்தியர்களிடம் ரூ.100 கோடி மோசடி: டில்லியில் சீனர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியர்களிடம் ரூ.100 கோடி மோசடி செய்த சீன நாட்டவரை டில்லியில் போலீசார் கைது செய்தனர்.சுரேஷ் அச்சுதன் என்பவர் போலீசில் சைபர் கிரைம் மூலம் தன்னிடம் 43.5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்தார். அதில், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி மோசடி நடந்ததாகவும், பல தவணைகளில் பணத்தை பெற்று ஏமாற்றியதாகவும் புகார் கூறியிருந்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர். அதில் பல வங்கிக்கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டது தெரிந்தது. அதில் ஒரு வங்கிக்கணக்கை ஆய்வு செய்ததில், முன்ட்கா பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் பெயரில் அது செயல்பட்டது தெரியவந்தது. அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கண்டுபிடித்து விசாரணையை துரிதபடுத்தியதில் மோசடியில் ஈடுபட்ட பங் சென்ஜின் என்ற சீனரை கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததும், அவர் மீது ஆந்திரா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் 17 வழக்குகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
நவ 19, 2024 20:41

இந்த சீனாக்காரர்கள் நமது எல்லையில்தான் தொல்லை கொடுப்பார்கள் என்று பார்த்தால், இப்ப நம் நாட்டுக்கு உள்ளேயே வந்து, அதுவும் தனி ஆளாக மோசடி செய்கிறான். இந்தியர்களே விழிப்புடன் இருங்கப்பா இந்த சீனாக்காரர்களிடம்.


Pandi Muni
நவ 19, 2024 18:51

வெறும் 100 கோடிதான் ஆட்டைய போட்டானா. திராவிடன் 4000 கோடிய சாக்கடை பேரை சொல்லி அடிச்சானே.கண்டுபிடிக்க முடிஞ்சிதா?


KRISHNAN R
நவ 19, 2024 18:35

எல்லா இடங்களிலும் இவர்கள் வந்து விட்டார்கள்


Raghavan
நவ 19, 2024 18:25

17 வழக்குகளுடன் இதுவும் ஒன்று போவியா. இந்த வழக்குகள் எல்லாவற்றிக்கும் குற்றப்பத்திரிக்கை தயார் செய்து கோர்ட்டில் சமர்பிப்பதற்கு எப்படியும் ஒரு 6 டு 10 மாதங்கள் ஆகும். பிறகு கோர்ட் அதற்கு நம்பர் கொடுத்து விசாரணைக்கு வர குறைந்தது ஒரு 5 வருடங்கள் ஆகும். ஏமாற்றிய பணம் கோடி கோடியாக இருக்கும்போது வாதாடுவதற்கு இருக்கவே இருக்கிறார்கள் கபில் சிபல் போன்ற வக்கீல்கள். வாய்தா வாய்தா வாங்கியே வழக்கை குறைந்தது ஒரு 10 வருடங்கள் இழுத்து விடுவார்கள். கடைசியில் அரசாங்க தரப்பில் சரியான ஆவணங்கள் சமர்பிக்கப்படாததால் வழக்கு தள்ளுபடி என்பர். இது தான் நடைமுறை


D.Ambujavalli
நவ 19, 2024 17:44

வல்லவனுக்கு வல்லவன் ?. நமக்கு இவரே குருநாதர்


RAJ
நவ 19, 2024 17:32

இந்திய மக்களே, இவன்கிட்டகூடவா எமருவிங்க?


Loganathan Kuttuva
நவ 19, 2024 15:51

17 + 1 வழக்குகள்


முக்கிய வீடியோ