உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., - எம்.எல்.ஏ., சதீஷ் சைல் வீட்டில் ரூ.1.68 கோடி, தங்க கட்டிகள் பறிமுதல்

காங்., - எம்.எல்.ஏ., சதீஷ் சைல் வீட்டில் ரூ.1.68 கோடி, தங்க கட்டிகள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கனிம தாதுக்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்த வழக்கில், கார்வார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைல் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 1.68 கோடி ரூபாய் ரொக்கம், 6.75 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள் சிக்கி இருப்பதாக, அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரிகை கர்நாடக மாநிலம், பல்லாரியின் சண்டூர் வனப்பகுதியில் இருந்து மர்ம நபர்களால் கடத்தப்பட்ட க னிம தாதுக்களை, உத்தர கன்னடாவின் கார்வார் பெலகேரி துறைமுகத்தில் வனப்பகுதியினர் சேமித்து வைத்திருந்தனர். இந்த கனிம தாதுவை திருடி, கப்பலில் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக, கார்வார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைல் உள்ளிட்டோர் மீது 2010ல் கு ற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரித்தது. பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வ ழக்கு விசாரணை முடிந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதி தீர்ப்பு அளித்த நீதிபதி சந்தோஷ் கஜானன் பட், எம்.எல்.ஏ., சதீஷ் சைலுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 44 கோடி ரூபாய் அபராதம் வி தித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சதீஷ் சைல் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்தது. கனிம தாது கடத்தல் விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது பற்றி அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக கார்வாரில் உள்ள சதீஷ் சைல் வீடு, கோவா, மும்பை, டில்லியில் உள்ள அவருக்கு சொந்தமான 15 இடங்களில் கடந்த 13, 14 தேதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆவணங்கள் பறிமுதல் இந்த சோதனையின்போது, 1.68 கோடி ரூபாய் ரொக்கம்; 6.75 கிலோ தங்கக் கட்டிகள்; சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை நேற்று கூறி உள்ளது. இவை தவிர, சதீஷ் சைல் வங்கிக்கணக்கில் இருந்த 14.13 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

naranam
ஆக 16, 2025 11:02

இத்தாலியன் இஸ்லாமாபாத் நேஷனல் கான்கிரஸ் என்றால் சும்மாவா? இந்தியாவுக்கு எதிராக செயல்படுவது தானே அவர்கள் கொள்கை! ஆனால் நீதிபதி வர்மாவாகட்டும் வேறு எந்த ஊழல்வாதியாகட்டும். தண்டனை ஒரே மாதிரியாகத் தானே இருக்க வேண்டும்?


Mahendran Puru
ஆக 16, 2025 08:46

அவராவது ஆளுங்கட்சி. இங்கே ஒரு ஆள் எம்எல்ஏ இல்லாத கட்சியின் தலைவர், தம் வீட்டுச் செலவுக்கு மாதாமாதம் நண்பர்கள் எட்டு லட்சம் தருவதாகச் சொன்னார். அவர் மேலோ அவர் நண்பர்கள் மேலோ நடவடிக்கை இல்லை.


Kasimani Baskaran
ஆக 16, 2025 07:27

6.5 கோடி தங்கக்கட்டி என்றல்லவா போட்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு 1.68 ரொக்கத்தை பெரிது போல காட்டி தொந்தி செய்தி போல காட்டி மானத்தை வாங்கிவிட்டீர்கள்..


நிக்கோல்தாம்சன்
ஆக 16, 2025 04:57

இப்போ வழக்கை நிறுத்தி வைத்த நீதிமன்றத்தின் அதிபர் நீதிபதி, வக்கீல் வீட்டிலும் ரைடு நடவேண்டும் என்ற குரல் மட்டும் எழவே எழாது


M Ramachandran
ஆக 16, 2025 01:38

கர்நாடாக வெறும் ஜுஜுபி . இங்கு தமிழ்நாட்டிலுள்ள ள்ள முதலையிகளை யாராலும் பிடிக்க முடியாது. பணம் என்ற பள்ளிநாள்கடித்து முழுங்க்கிவிடும்.


முக்கிய வீடியோ