உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான அதிகாரி வீட்டில் 2 கோடி ரொக்கம் பறிமுதல்

ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான அதிகாரி வீட்டில் 2 கோடி ரொக்கம் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அசாமில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.2 கோடி, சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அசாமில் தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிக்கு நிறைவுச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய கவுகாத்தியில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் பிராந்திய இயக்குநர் மயிஸ்நாம் ரிதன்குமார் சிங் என்பவரை கடந்த 14ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். லஞ்சம் கொடுத்த மோகன்லால் ஜெயின் என்ற நிறுவனத்தின் வினோத் குமார் ஜெயின் என்பவரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ரிதன்குமார் சிங்குக்கு சொந்தமாக கவுகாத்தி, உ.பி.,யின் காசியாபாத், மணிப்பூரின் இம்பால் நகரில் உள்ள வீடுகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரூ.2.62 கோடி ரொக்கம், டில்லி என்சிஆர், கர்நாடகாவின் பெங்களூரு, கவுகாத்தியில் அசையா சொத்தில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள், 2 பிளாட்களுக்கான ஆவணங்கள், இம்பாலில் விவசாய நிலத்திற்கான ஆவணம், சொகுசு காரில் முதலீடு செய்ததற்கான ஆவணம், பல லட்சம் மதிப்புள்ள 2 சொகுசு வாட்சுகள் மற்றும் 100 கிராம் வெள்ளிக் கட்டி ஆகியவற்றை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
அக் 18, 2025 06:27

நேரு பணியாணை வழங்கிய ஆளா இருக்கும்.


Mani . V
அக் 18, 2025 04:11

அட போங்கப்பா, நம்ம ஐந்து கட்சி அமாவாசையிடம் பலப் பல லட்சம் கோடிகள் குவிந்து கிடக்கிறது. தீபாவளிக்கு கரூர் மக்களுக்கு கொடுத்துள்ள அன்பளிப்பு மட்டுமே பல கோடியை எட்டும். அதற்குத்தான் ஊழல் செய்தாலும், கொள்ளையடித்தாலும் மாட்டிக் கொள்ளாமல் செய்ய நம்ம ஐந்து கட்சி அமாவாசையிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.


RAMESH KUMAR R V
அக் 17, 2025 19:37

லஞ்சம் பிடித்த கையோடு உடனே டிஸ்மிஸ் பண்ணும் உறுதியான சட்டம் தேவை.


D.Ambujavalli
அக் 17, 2025 18:13

அந்த அதிகாரிக்கு சமர்த்து போதாது இங்கே வந்து training எடுத்தால், 2 சொச்சம் என்ன, 2000 கோடியைக்கூட அழகாக்க பதுக்கக் கற்றுக்கொடுப்பார்கள் ‘வாங்கியதில்’ கணிசமான percentage ரைடு நடத்தியவர்களுக்கு வீசியெறிந்து வெளியே வந்து, புகார் கொடுத்தவரை ஒரு வழி பண்ணிவிடுவான்


RAVINDRAN.G
அக் 17, 2025 17:16

நீங்க வேணா பாருங்க இன்னும் 15 நாளில் வெளியே வந்துடுவார். இதைவிட பெரிய்ய போஸ்டிங் கிடைக்கும் . கொடுக்கவேண்டியதை கொடுத்தால் தானா வேலை நடக்கும். இதுமாதிரி எத்தனை பேர் விசாரணை வளையத்துக்குள் இருக்காங்க. இப்போ வெளியில் இருக்காங்க


தியாகு
அக் 17, 2025 16:37

ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான அதிகாரி வீட்டில் 2 கோடி ரொக்கம் பறிமுதல். ஹி...ஹி..ஹி..இதெல்லாம் ஒரு செய்தியா? எங்க டுமிழ்நாட்டுக்கு வந்து பாருங்க, திமுகவின் சாதாரண வார்டு மெம்பெர் கூட இதைவிடவும் அதிகமா ஆட்டையை போட்டு சொத்து சேர்த்து வைத்திருப்பான். போவியா அங்கிட்டு.....


panneer selvam
அக் 17, 2025 16:35

Now Tamils will understand why Stalin ji withdrew the permission to CBI to conduct any search without his authorization .


Alphonse Mariaa
அக் 17, 2025 15:56

இதுவரை கைதான லஞ்ச பேர்வழிகள் நிலை என்ன


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை