உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.2 கோடி இழப்பீடு: அல்லு

ரூ.2 கோடி இழப்பீடு: அல்லு

ஹைதராபாத்: தெலுங்கானாவில், தியேட்டர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன், 2 கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான, புஷ்பா - 2: தி ரூல் திரைப்படம் கடந்த 5ல் வெளியானது. ஹைதராபாதில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தின் சிறப்பு காட்சி டிச., 4ல் திரையிடப்பட்டது. திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுனும் தியேட்டருக்கு வந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி, 35, என்ற பெண் உயிரிழந்தார். அவரது 8 வயது மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன், ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், உயிர்இழந்த ரேவதியின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன், 1 கோடி ரூபாயும், திரைப்பட இயக்குனர் சுகுமார் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் தலா 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 2 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க உள்ளதாக நேற்று அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Alagusundram Kulasekaran
டிச 27, 2024 11:14

நம்முடைய தமிழ் நடிகர்கள் ஐந்து லட்சம் கூட தரமாட்டார்கள் நடிகர் அஜித் இதில் விதிவிலக்கு நல்ல மனிதர் அவருக்கு நல்ல மனசு இருக்கு விஜேய் உதவி செய்ய மாட்டார் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கி ஒரு மரணம் நடந்தது கண்டுக்கவே இல்லை விருந்து என்ற பெயரில் சைவ உணவு விருந்து சைவ அசைவம் இருக்கும் என நம்பி வந்த ரசிகர்களு அசைவ விருந்து போட வக்குஇல்லாத விஜேய் நாட்டுக்கே நல்லது செய்வானாக? மக்கள் சிந்திக்க வேண்டும்


NAGARAJAN
டிச 26, 2024 15:02

இந்த மாதிரி பொறுப்பில்லாத அல்லு அர்ஜுனுக்கும் தண்டனை தர வேண்டும். .


Senthoora
டிச 26, 2024 05:18

இப்போ எதுக்கு இழப்பீடு, பொண்டாட்டியும், பிள்ளையும் பரலோகம் போய்ட்டாங்க, இனி இந்த பணத்தை வைத்து பொறுப்பில்லாமல் முதல் நாள் ஷோவுக்கு கூட்டிப்போன கணவனுக்கா. இனி அவன் ஒரு கல்யாணம் பண்ணி சொகுசு வாழ்க்கை வாழவா? அவனுக்கும் தண்டனை கொடுக்கணும். இந்த மாதிரி இழப்பீடு செய்தால் இனி வருக்காலத்திலும் இந்தமாதிரி இழப்பீடுகேட்க மற்றவர்களும் முயட்சி செய்வார்கள். அந்த 2 கோடிகளை வயது முதிந்தோர் இல்லங்களுக்கு கொடுக்கணும்.


Raj
டிச 26, 2024 04:52

பணத்திற்காக இத்தனை நாடகமா. கேவலம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை