உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவிற்கு உலக அழகிப் போட்டி தேவையா? மாநில காங்., அரசை சாடும் எதிர்க்கட்சிகள்

தெலுங்கானாவிற்கு உலக அழகிப் போட்டி தேவையா? மாநில காங்., அரசை சாடும் எதிர்க்கட்சிகள்

ஐதராபாத்: ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் ரூ.71 ஆயிரம் கோடி நிதி நெருக்கடியில் தெலுங்கானா மாநிலம் தத்தளிக்கும் போது ரூ.200 கோடி செலுத்தி, ஐதராபாத்தில் உலக அழகிப் போட்டி நடத்த வேண்டுமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளது.கடந்த ஆண்டு மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடந்த உலக அழகிப் போட்டி, இந்தாண்டு மே மாதம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இச்சூழ்நிலையில், நேற்று மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 71 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள், மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் உண்டாக்கிய வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்காமல், உலக அழகிப் போட்டிக்கு நிதி ஒதுக்குவதா என கண்டனம் தெரிவித்து உள்ளன.இது தொடர்பாக பாரதிய ராஷ்டரீய சமிதி கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க முடியவில்லை. ஆனால், ரூ.200 கோடி செலவில் அழகிப் போட்டி நடத்துவது அவசியமா? பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் எனக்கூறியிருந்தது.அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே டி ராமராவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகளவில் ஐதராபாத் மற்றும் தெலுங்கானாவின் பிம்பத்தை மேம்படுத்த இந்தியாவிற்கு ஒரு மதிப்புமிக்க நிகழ்வை கொண்டு வர அயராது பாடுபட்டோம். அந்த லட்சியத்தின் ஒரு பகுதியாக பார்முலா இ பந்தயம் நடத்தினோம். இதற்காக ரூ.46 கோடி நாங்கள் செலவு செய்தது தவறு. அதற்காக வழக்குப்பதிவு செய்வீர்கள்.ஆனால், உலக அழகிப் போட்டி நடத்த மக்கள் வரிப்பணத்தில் ரூ.200 கோடி செலவு செய்வது சரி…இதற்கு என்ன காரணம்? ராகுல் விளக்கம் அளிப்பாரா? எனக்கூறியுள்ளார்.மேலும் அவர்,தெலுங்கானாவில் அனைத்தும் நன்றாக உள்ளது என நம்மை நம்ப வைக்க காங்கிரஸ் அரசு முயற்சி செய்கிறது. அவர்களின் கூற்றுப்படி, முதலீடுகள் வேகமாகவும், வலுவாகவும் வருகிறது.விவசாயத்துறை வளர்கிறது.அதிகளவில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.முதல்வர் 18 மணி நேரம் உழைக்கிறார் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.அப்படி என்றால், முதல்வர் நேற்று வளர்ச்சி எதிர்மறையில் உள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை ரூ.71 ஆயிரம் கோடி என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது ஏன்,தெலுங்கானா வளர்கிறதா அல்லது வீழ்கிறதா… எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kasimani Baskaran
மார் 20, 2025 03:58

அழகைப்பார்த்தால் பசிதீரும் என்பது திராவிட பழமொழி, பொழுதுபோக்குதான் வாழ்க்கை என்று நினைப்பவர்கள் இவர்கள்..


Appa V
மார் 19, 2025 22:23

இடுக்கண் வருங்கால் நகுக ...


vbs manian
மார் 19, 2025 22:16

ஏழு லட்சம் கோடி கடன். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கஷ்டம். தமாஷ் செயகிறார்கள்.


Venkatesh
மார் 19, 2025 22:16

ரேவந்த் ரொட்டி ஓவரா ஆட்டம் போடுறாறு... தேசிய அளவில் காங்கிரஸ் நிலை தெரித்தும் இந்த ஆட்டம்.....


Ramesh Sargam
மார் 19, 2025 22:03

வாக்களித்த மக்கள் இதை எதிர்த்து போராட்டம் நடத்தவேண்டும். மக்களின் வரிப்பணம் இப்படி வீணாப்போன போட்டிகள் நடத்த மக்கள் அனுமதிக்கவே கூடாது.


பாலா
மார் 19, 2025 21:45

தெலுங்கு இரத்தயுறவு இழவுரசன் பதினொருவின் திராவிடிய மாதிரியில் அன்புக் காதலிக்குப் பரிசாகக் கார் பந்தயம் நடந்தது ஆனல் இழவுரசனுக்கு இதைக் கேட்டதும் நித்திரை கெட்டுவிடும் தான் ஓழுங்கு செய்திருந்தால் அனுபவித்திருக்கலாம் என்று.


SUBBU,MADURAI
மார் 19, 2025 21:14

தமிழகத்தில் விவசாயிகள் கஷ்டப் பட்டு உழைத்து விளைவித்த நெற்பயிர்களை காக்க கோடவுன்கள் கட்டாமல் அவற்றை கட்டாந்தரையில் அடுக்கி மழையில் நனைய விட்டு நாசமாக்கிய திராவிட மாடல் திமுக அரசு சென்னையில் மக்கள் உபயோகத்தில் உள்ள சாலையில் கார் ரேஸூக்கு செலவிட்ட முப்பது கோடியை செலவழித்தை விடாவா இது பெரிய விஷயம்?


Ramesh Sargam
மார் 19, 2025 21:43

சரியாக கூறினீர்கள்.


புதிய வீடியோ