உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ.3,000 கோடி நன்கொடை

ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ.3,000 கோடி நன்கொடை

அயோத்தி: உ.பி.,யில் உள்ள அயோத்தியில் பால ராமர் கோவில் கட்டுமான பணிக்கான நிதி திரட்டும் பிரசாரம் கடந்த, 2022ல் துவங்கியது. கடந்த ஆண்டு ஜனவரி, 22ல் கோவில் கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில், நவ.,25ல் கோவில் கொடியேற்று விழா நடக்கிறது. இதையொட்டி, ராமர் கோவில் கட்டுமான குழு தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா நேற்று அளித்த பேட்டி: அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு பொது மக்கள், 3,000 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தனர். கோவில் கட்டுமான பணிகள், 1,800 கோடி ரூபாயில் கட்ட திட்டமிடப்பட்டது. இதில், 1,500 கோடி ரூபாய் இதுவரை செலவிடப்பட்டுள்ளது. நவ.,25ல் நடக்கும் கொடியேற்ற நிகழ்வில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடிமரத்தில் கொடியேற்றுவார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டுமான பணிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். இதில், 8,000 பக்தர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

SULLAN
அக் 30, 2025 18:36

தம்பி ஒரு மனுஷன் பொய் பேசலாம். அதுக்காக ஏக்கர் கணக்குல அளந்து விட கூடாது. பாபர் நாமா புத்தகத்தில் நீங்கள் கூறியது போல எல்லாம் எதுவுமில்லை. மாறாக தனது மகன் ஹிமாயூனுக்கு ஹிந்துஸ்தானம் பலதரப்பட்ட மத ,இன மக்களுக்கானதாக இருக்கிறது அவர்களின் நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் நம்பிக்கையை சிதைக்காமல் காப்பாற்றி அவர்கள் அன்பை வெற்றி கொள்ள வேண்டும் என அறிவுரை கூறியது இன்னும் ஆவண காப்பகத்தில் இருக்கிறது.


Natchimuthu Chithiraisamy
அக் 30, 2025 14:27

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டுமான பணிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். இதில், 8,000 பக்தர்கள் பங்கேற்கின்றனர். அனைவரும் வாய்ப்பில்லை.


Kasimani Baskaran
அக் 30, 2025 04:02

பாபர் தான் எழுதிய சுய சரிதையில் நான்தான் இடித்தேன் என்று சொல்லியிருக்கிறார். அதன் பின்னரும் கூட அதை இடித்தது தவறு என்று 500 ஆண்டுகள் போராடி மறுபடியும் இராமபிரானுக்கு கோவில் கட்டியிருக்கிறார்கள். இதெல்லாம் தங்களை வெறுமனே இந்துக்கள் என்று சொல்பவர்களுக்கு புரியாது.


KavikumarRam
அக் 30, 2025 11:25

ஆபத்தானவர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை