உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.3,200 கோடி ஜி.எஸ்.டி., மோசடி: பெங்களூருவில் 2 பேர் கைது

ரூ.3,200 கோடி ஜி.எஸ்.டி., மோசடி: பெங்களூருவில் 2 பேர் கைது

பெங்களூரு: பெங்களூரு ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம், ரூ.3,200 கோடி மதிப்புக்கு மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்துள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் (டி.ஜி.ஜி.ஐ.,) இயங்கி வருகிறது. இந்த இயக்குனரகம், பெங்களூரு மற்றும் மும்பையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியதில் ஒரு சிக்கலான மோசடியைக் கண்டுபிடித்தது.அதில் , ரூ.3,200 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய ஜி.எஸ்.டி., மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக 2 பேரை கைது செய்தது. தலைமறைவாக உள்ள 3வது சந்தேக நபரை தேடி வருகிறது.பெங்களூரு மண்டல கூடுதல் இயக்குனர் ஜெனரல் சுசேதா ஸ்ரீஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:குற்றம் சாட்டப்பட்டவர்கள், முறையான வணிக நடவடிக்கைகள் இல்லாத போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். அவர்கள், இந்த நிறுவனங்களை பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டனர். மேலும் ரூ.665 கோடி மதிப்பிலான போலி உள்ளீட்டு வரி வருவாய் பெறுவதற்கும் ரசீதுகளை கொடுத்துள்ளனர்.இவ்வாறு தயார் செய்யப்பட்ட போலி இன்வாய்ஸ்களின் மொத்த மதிப்பு ரூ.3,200 கோடிக்கு மேல் இருக்கும்.விசாரணையில் உண்மையான வணிக நடவடிக்கை இல்லாத 15 சந்தேகத்திற்குரிய நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள எப்.எம்.சி.ஜி., பொருட்களைப் பெற்றதாக அறிவித்தன. ஆனால் உண்மையில் அப்படி எதையும் பெறவில்லை.எந்த நிறுவனங்களிடமும் வெளிப்புற இ-வே பில்கள் இல்லை. இந்த ஒன்பது நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் கூட பட்டியலிடப்பட்டுள்ளன.இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவற்றிற்கான ஜி.எஸ்.டி., வருமானங்கள் பொதுவான ஐ.பி., முகவரிகளிலிருந்து தாக்கல் செய்யப்பட்டன என்று கண்டறியப்பட்டது.மோசடியின் அளவு மற்றும் பொது மக்கள் மீதான அதன் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, நாங்கள் இந்த விஷயத்தில் முழுமையான விசாரணையைத் தொடங்கி இருக்கிறோம்.இவ்வாறு சுசேதா ஸ்ரீஜேஷ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mediagoons
ஜன 29, 2025 23:32

பட்டியலிடப்பட்டும் செபி கண்டுகொள்ளாமல் கண்டுபிடிக்கமுடியாமல் இருந்தது ஏன்


Ramesh Sargam
ஜன 29, 2025 20:08

செய்தியின் கடைசிவரி வரைக்கும் கூட மோசடி செய்த நிறுவனங்களின் பெயர்கள் கூறப்படவில்லை. மறைக்கப்பட்டுள்ளது. ஏன்?


சமீபத்திய செய்தி