உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போக்குவரத்து விதிகளை மீறும் டிரைவர்களுக்கு ரூ.5,000 அபராதம்

போக்குவரத்து விதிகளை மீறும் டிரைவர்களுக்கு ரூ.5,000 அபராதம்

பெங்களூரு: சாலைப் போக்குவரத்து விதிகளை மீறுவதில், பி.எம்.டி.சி., ஓட்டுனர்கள், நடத்துனர்கள் முதல் இடத்தில் உள்ளனர். இதனால் மேலதிகாரிகளுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.தனியார் வாகனங்களை போன்று, அரசு வாகனங்களும் சாலைப் போக்குவரத்து விதிகளை மீறுகின்றன. குறிப்பாக பி.எம்.டி.சி., ஓட்டுனர்கள், நடத்துனர்கள், இவ்விஷயத்தில் முதல் இடத்தில் உள்ளனர். பஸ் ஓட்டும்போது, மொபைல் போன் பயன்படுத்த கூடாது என, மேலதிகாரிகள் பல முறை உத்தரவிட்டுள்ளனர். ஆனால் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துகின்றனர்.பெங்களூரில் லட்சக்கணக்கான மக்கள், தங்களின் போக்குவரத்துக்கு பி.எம்.டி.சி., பஸ்களை நம்பியுள்ளனர். ஆனால் இவர்களின் உயிருடன் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் விளையாடுகின்றனர். இதை தீவிரமாக கருதிய மேலதிகாரிகள், நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.பஸ் ஓட்டும்போது, மொபைல் பயன்படுத்துவது உட்பட வெவ்வேறு வகைகளில் போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்க, பி.எம்.டி.சி., தயாராகி வருகிறது.இதற்கு முன்பு மொபைல் போன் பயன்படுத்தி சிக்கும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவது வழக்கம். தற்போது விதிமுறைகளை மீறினால், 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி