உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயிர் இழப்புக்கு ரூ.6 நிவாரணம்: மஹாராஷ்டிர விவசாயி வேதனை

பயிர் இழப்புக்கு ரூ.6 நிவாரணம்: மஹாராஷ்டிர விவசாயி வேதனை

சத்ரபதி சாம்பாஜிநகர்: மஹாராஷ்டிராவில், பயிர் இழப்புக்கு விவசாயி ஒருவருக்கு, அம்மாநில அரசு 6 ரூபாயை நிவாரண தொகையாக வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மஹா.,வில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது இங்கு, கடந்தாண்டு ஆக., மற்றும் செப்., மாதங்களில் கனமழை கொட்டியது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 31,628 கோடி ரூபாய் இழப்பீடு தொகையை அரசு அறிவித்தது. இந்நிலையில், அகோலா மாவட்டத்தில் 3 - 21 ரூபாய் வரை பயிர் இழப்பு தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மராத்வாடாவின் தாவர்வாடி கிராமத்தை சேர்ந்த திகம்பர் சுதாகர் டாங்டே என்ற விவசாயிக்கு 6 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, அவர் கூறுகையில், 'கன மழையால் பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடாக, 6 ரூபாய் என் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து, ஒரு கப் டீ கூட வாங்க முடியாது. இவ்வளவு குறைவாக இழப்பீடு வழங்கியதற்கு அரசு வெட்கப்பட வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

SANKAR
நவ 06, 2025 09:45

36000 kodi enge pochu?


Rahim
நவ 06, 2025 09:42

ஜி யின் விழுதுகள் ஒன்னையுமே காணோமே ஓஹோ தமிழ்நாடு செய்திகளுக்கு மட்டும்தான் அந்த 2 ரூவா தரப்படுகிறதா


மு. செந்தமிழன்
நவ 06, 2025 09:10

இது வங்கி அக்கவுண்ட் கணக்கு சரிபார்ப்பு முறை


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 06, 2025 10:18

இப்படி கூட முட்டு கொடுக்கலாமா ?வங்கி கணக்கு சரிபார்க்க ஒரு ரூபாய் போதுமே .அதுக்கு எதுக்கு ஆறு ரூபாய். ராசி நம்பரா?


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 06, 2025 08:14

இந்த ஆறு ஓவா கொடுக்கறதுக்கு நிர்வாக செலவு அறுநூறு ஓவா எழுதி இருப்பீங்களே


Ramesh Sargam
நவ 06, 2025 07:51

ஊழல், ஊழல், ஊழல்.


அப்பாவி
நவ 06, 2025 07:40

அங்கேயும் டபுள் இஞ்சின் சர்க்கார்தான் நடக்குது...


Nathansamwi
நவ 06, 2025 07:08

பாவம் இப்போ பீகார் ல எலேச்டின் இருக்கு ...அதுனால இதெல்லாம் இப்போதைக்கு கண்டுக்க மாட்டார் ...


SANKAR
நவ 06, 2025 06:56

aryavidiyaal latchanam ithuthaan.