இந்துார்:மத்திய பிரதேச மாவட்ட நீதிமன்றத்தின் வங்கிக் கணக்கிலிருந்து நுாதன முறையில், 64 லட்சம் ரூபாய் மோசடி செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.ம.பி.,யின் இந்துார் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தின் வங்கிக் கணக்கிலிருந்து, மார்ச் 5 முதல் ஜூன் 11 வரை, 64 லட்சம் ரூபாய் முறைகேடாக எடுக்கப்பட்டது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, நீதிமன்றம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்தனர். அப்போது, நீதிமன்றத்தின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த, 'மொபைல் போன்' எண்ணை பயன்படுத்தி, பணம் எடுக்கப்பட்டது தெரிந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fkbdmu41&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த, 'மொபைல் போன்' எண், நீண்ட காலமாக, 'ரீசார்ஜ்' செய்யப்படாததால் செயலிழந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அந்த எண்ணை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சஜித் சத்தார், 57, என்பவருக்கு ஒதுக்கியது. இந்த மொபைல் எண்ணை பெற்ற பின், சஜித்திற்கு நீதிமன்றத்தின் வங்கிக் கணக்கிலிருந்து அரசு பரிவர்த்தனைகள் குறித்த குறுஞ்செய்திகள் வரத் துவங்கின. இதை, மென்பொறியாளரான தன் மகன் சாஹிலிடம் தெரிவித்தார். இதையடுத்து, அந்த மொபைல் எண்ணை தவறாகப் பயன்படுத்தி, நீதிமன்ற வங்கிக் கணக்கின், 'ஆன்லைன்' பரிவர்த்தனைக்கான பாஸ்வேர்டை சாஹில் பெற்றார். அதை வைத்து, நீதிமன்ற வங்கிக் கணக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் எடுத்தார். இந்த தகவலை, இந்துார் கூடுதல் போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தண்டோடியா தெரிவித்தார்.இந்த ஆன்லைன் மோசடியில் கிடைத்த பணத்தை தந்தை-, மகன் இருவரும் விலையுயர்ந்த மொபைல் போன்கள், சொகுசு கார் வாங்கவும், வெளிநாட்டுப் பயணங்கள், மருத்துவ சிகிச்சை மற்றும் வீடு கட்டுமானத்திற்கு செலவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இருவரையும் கைது செய்து விசாரணை நடக்கிறது.