உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதியோர் சலுகை கட்டணம் ரத்தால் ரூ.9,000 கோடி கூடுதல் வருவாய்

முதியோர் சலுகை கட்டணம் ரத்தால் ரூ.9,000 கோடி கூடுதல் வருவாய்

புதுடில்லி,: 'மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வாபஸ் பெறப்பட்டுள்ள ஐந்தாண்டுகளில், ரயில்வேக்கு, 9,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது' என, தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் உரிமை சட்ட ஆர்வலர் சந்திரசேகர் கவுர் கூறியதாவது:ரயிலில் பயணிக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, 40 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டது. கடந்த 2020, மார்ச் 20லிருந்து இந்த சலுகை ரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த ஐந்தாண்டுகளில், ரயில்வே துறைக்கு, 9,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்ற தகவலை, சி.ஆர்.ஐ.எஸ்., எனும் இந்திய ரயில்வே தகவல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில், 31.35 கோடி மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.'ரயில்களில் மீண்டும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளிக்க வேண்டும்' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பலமுறை, பல கட்சிகளின் எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அப்போதெல்லாம் அவர், 'குறைந்த கட்டணத்தில் தான் ரயில்வே சேவைகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, 100 ரூபாய் மதிப்புள்ள சேவைகளை பெறும் மக்கள், ரயில் கட்டணமாக, 54 ரூபாய்தான் கொடுக்கின்றனர்' எனக் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அப்பாவி
ஏப் 11, 2025 15:59

சீனியர்களை வஞ்சித்து வாரணாசில முதியோர்களுக்கு இலவச சிகிச்சையாம்.


veeramani
ஏப் 11, 2025 11:22

இந்தியாவில் மூத்த குடிமக்கள் பலர் வருமானம் இல்லாமல் வசிக்கின்றனர். பத்து சதவீதம் மூத்த குடிமக்களே ஓரளவு இரண்டு வேலை சாப்பாடுதான், மற்றும் நிம்மதி வாழ்க்கை வாழுகிறார்கள் இந்திய ரயில்வேயில் இந்த விபரங்களை கணக்கில்கொண்டு ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களையும் மனிதர்களாக நினைத்து தூங்கும் பேட்டி, ஏ கை பெட்டிகளில் சுமார் பத்து சதவீதம் தள்ளுபடி பண்ணலாம். இந்திய மூத்த குடிமக்கள் நிம்மதியாக பயணம் செய்வதற்கு வழிவகுக்கலாம்


raju
ஏப் 11, 2025 10:11

அதிபுத்திசாலிகள் ஆட்சியில்.. மக்கள் விரோத ஆட்சி


பாமரன்
ஏப் 11, 2025 10:09

அடுத்த கட்ட வருவாய் பெருக்கும் நடவடிக்கையாக மெத்த படித்த அண்ணன் வைஷ்னவ் அவர்கள் இனிமேல் (எதுக்கும் உதவாத) பெருசுகள் ரயிலில் ஏறினால் அவர்களிடம் இருந்து அரை லிட்டர் ரத்தத்தை உறிஞ்சி மார்க்கெட்ல வித்து காசாக்கும் திட்டத்தை அறிவிப்பார்..


c.k.sundar rao
ஏப் 11, 2025 10:00

Modi govt back stabbed senior citizens in this issue.


Thetamilan
ஏப் 11, 2025 09:52

மக்களைப்பற்றியே கவலைப்படாத, கொள்ளையர்களிடமிருந்து மாதாமாதம் பல லச்சம் கோடிகளை தெண்டமாக மட்டும் பெரும் இந்து மதவாத அரசு


ஆரூர் ரங்
ஏப் 11, 2025 09:33

சலுகைக்கான மானியம் நமது வரிப்பணத்தில்தான் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் தொகை அதிகரிப்பால் மானியமும் வரிகளும் அதிகரிக்கின்றன. ஆண்டுக்கு 1000 கிமி வரை மட்டும் சலுகையளிக்கலாம்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஏப் 11, 2025 09:21

அப்படியென்றால் அரசு அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் ரயில்வேயில் கொடுக்கும் சலுகைகள் அனைத்தையும் நிறுத்துங்கள். இன்னும் லாபம் கூடும்.


சிவம்
ஏப் 11, 2025 08:28

எவ்வளவோ லட்சம் கோடிகள் மத்திய அரசு நல திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுக்கு வழங்குகிறது. அவை முறையாக பயணீட்டாளர்களை அடைவதில்லை. அல்லது முக்கால்வாசி பணம் ஊழல் பெருசாளிகளால் கொள்ளையடிக்க படுகிறது. முதியோர் கட்டண சலுகை ரத்து செய்ததால் ஏற்படும் சேமிப்பு 9000 கோடி என்று சொல்வதில் மத்திய அரசு வெட்கப்பட வேண்டும்.


D Natarajan
ஏப் 11, 2025 08:08

ஏன் இவர்களுடைய மந்திரிகளின் சலுகையை ரத்து செய்யக்கூடாது .


முக்கிய வீடியோ