உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.1 லட்சம் கோடி ராணுவ கொள்முதல்

ரூ.1 லட்சம் கோடி ராணுவ கொள்முதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில், உள்நாட்டில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்களை, 1.05 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.இது குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து 1.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.இதில், மீட்பு பணிகளுக்கான டாங்கிகள், மின்னணு போர் அமைப்பு, முப்படைகளுக்கான ஒருங்கிணைந்த சரக்கு மேலாண்மை அமைப்பு மற்றும் ஏவுகணைகள் ஆகியவை அடங்கும். இவை ராணுவத்தின் இயக்கம், வான் பாதுகாப்பு, விநியோக மேலாண்மை மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !