உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.1.57 கோடி ஜி.எஸ்.டி., பாக்கி: பிரபல கேரள கோயிலுக்கு நோட்டீஸ்

ரூ.1.57 கோடி ஜி.எஸ்.டி., பாக்கி: பிரபல கேரள கோயிலுக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலுக்கு ஜி.எஸ்.டி., துறை அலுவலக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் வணிக நிறுவன கட்டடங்களின் மூலம் வாடகை, மற்றும் காப்பக கட்டணம், டிக்கெட் வசூல், புத்தகங்கள், துணிகள் விற்பனை, புகைப்படங்கள் விற்பனை, மற்றும் யானை ஊர்வலம், பவனி ஆகியன மூலம் கோடிக்கணக்கான வருவாய் வருகிறது. இதில் சில வரிக்குட்பட்டது. சில வரிக்குட்பட்டு வராது. இருப்பினும் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஜி.எஸ்.டி வரி ரூ.1.57 கோடி கட்டாமல் நிலுவையில் இருப்பதாக ஜி.எஸ்.டி துறையினர் நோட்டீஸ் அனுப்பி பணம் செலுத்துமாறு கேட்டுள்ளனர். இதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் பதில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஜிஎஸ்டி கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பதில் அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramesh Sargam
நவ 07, 2024 21:55

அவர் சொல்றார் வரி ஏய்ப்பு என்று. இவர் சொல்றார் வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கும் வரி போட்டிருக்கிறார்கள் என்று. யார் உண்மை பேசுகிறார்கள், யார் பொய் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. யாரைத்தான் நம்புவதோ இந்த பேதை நெஞ்சம் என்கிற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.


GMM
நவ 07, 2024 19:40

வாடகை, டிக்கெட் போன்ற பிற வருவாய் கோவிலுக்கு திருப்பணிகள் செய்ய மீண்டும் சேரும் என்றால் ஜிஎஸ்டிக்குள் வராது. தண்ணீர் தொட்டி உபரி நீர் மீண்டும் தொட்டியில் விழுவது போல் தான் இந்த வருவாய். அப்படி என்றால், சிறுபான்மை வருவாய், தொண்டு நிறுவனங்கள், கட்சிகள் நிதி போன்றவை அனைத்தும் ஜிஎஸ்டி க்குள் வர வேண்டும்.


ஆரூர் ரங்
நவ 07, 2024 19:01

பிரசாதங்களை விலைக்கு விற்பனை செய்வது ஏற்கக் கூடியதாக இல்லை. அது போல உருவப படங்களை விலைக்கு விற்றால் ஜிஎஸ்டி போட கோயில் என்று பேதம் பார்க்க முடியாது. தேவஸ்வம் போர்டிலுள்ள கம்மிகளுக்கு இது தெரியும். பாரம்பரிய ஆன்மீக நடவடிக்கைகள் தவிர வேறு மத வியாபாரங்களுக்கு வரி விதிப்பது நியாயமே.


sundarsvpr
நவ 07, 2024 17:30

வருமானத்தை தாறு மாறு வரி விதிப்பில் அரசு சுரண்டினால் திருக்கோயில்கள் பார்த்துகொண்டுஇருக்காது.திருக்கோயில்கள் அரசால் வளர்ச்சையடையவில்லை. மக்கள் காணிக்கையை வைத்து பணிகள் நடைபெறுகின்றன. காணிக்கை செலுத்துவதில் சுணுக்கம் காணில் பக்தி குறைந்ததாக கருத கூடாது.


Nandakumar Naidu.
நவ 07, 2024 13:48

இதே போல மற்ற மத வழிபாட்டுத்தலங்களுக்கும் ஜிஎஸ்டி போடுகிறீர்களா? மத்திய, மாநில அரசாங்கங்களே?


வைகுண்டேஸ்வரன்
நவ 07, 2024 15:48

மாநில அரசாங்கம் GST போட முடியாது என்று தெரியாதா? மற்ற மத வழிபாட்டுத்தலங்களில் Goods வியாபாரம் கிடையாது. கட்டண சேவைகள் Services கிடையாது.எனவே GST இல்லை போல.


vadivelu
நவ 07, 2024 16:21

இல்லை. இலவசமாக அரிசி, குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குகிறோம். அவர்களுக்கு வருமானம் இருந்தால்தானே வரி விதிக்க முடியும்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 07, 2024 21:00

கோவையில் இரயில் நிலையம் அருகில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மசூதி அதை சுற்றி உள்ள கடைகளில் இருந்து வாடகை வசூலிக்கிறது. அதற்கு ஜிஎஸ்டி உண்டா. ஒப்பணக்கார வீதி மசூதி வாடகைக்கு கடைகள் உள்ளது. அவர்கள் ஜிஎஸ்டி செலுத்துகிறார்களா? ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். இரயில் நிலையம் அருகில் இரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மசூதிக்கு மாற்று இடமாக வடகோவையில் இடம் வழங்கப்பட்டது. அவர்கள் அங்கு மசூதி கட்டிக் கொண்டு அதனையும் வைத்து கொண்டு இரயில் நிலையம் அருகில் உள்ள இடத்தையும் காலி செய்யவில்லை.


வைகுண்டேஸ்வரன்
நவ 07, 2024 13:28

இன்னிக்கு ராங்கு, duruvesan , பாஸ்கரன் எல்லாம் லீவு. ஹா ஹா ஹா ஹா....


வைகுண்டேஸ்வரன்
நவ 07, 2024 13:26

ஒன்றிய அரசு இந்துக்களின் விரோத அரசு என்று கூவல்கள் வருமோ?


Smba
நவ 07, 2024 13:25

பொழைக்க உடமாட்டா னுக பி. சே.பி.காரனுக


vadivelu
நவ 07, 2024 16:24

வணிக வரியை கொடுக்காமல் பிழைப்பது பிழைப்பாயா? வரி என்பது நூறு வருடங்களாக இருப்பது, என்னவோ இப்பதான் புதிதாக வரி விதிப்பது போல பேசுறீங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை