ரூ.5 லட்சம் இ - சிகரெட் பறிமுதல் ரூ.4 லட்சமும் சிக்கியது;5பேர் கைது
புதுடில்லி:தடை செய்யப்பட்டுள்ள, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 257 இ-சிகரெட்டுகள் மற்றும் 4 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், 5 பேரை கைது செய்தனர்.அசோக் பார்க் மெயின் மெட்ரோ ஸ்டேஷன் அருகே நேற்று முன் தினம் அதிகாலை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 'எர்டிகா' காருக்கு மற்றொரு காரில் இருந்து சிலர் பார்சல்களை மாற்றிக் கொண்டிருந்தனர். போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி, 257 இ--சிகரெட்டுகள் அடங்கிய பார்சல்கள் மற்றும் 4 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.ரித்திக் உப்பல்,22, சபி குமார்,32, அனிகேத்,32, பவன் சவுராசியா,42, திக்ஷாந்த் குமார்,28, ஆகிய 5 பேரை கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.நம் நாட்டில் இ- - சிகரெட் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பது 2019ம் ஆண்டு செப்டம்பரில் தடை செய்யப்பட்டது.