குழப்பத்தை ஏற்படுத்த இளைஞர்களை தூண்டிவிடும் சக்திகள்; ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு
டில்லியின் ஜந்தர் மந்தரில் சமீபத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்து ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே பதில் அளித்துள்ளார்.அவர் கூறியதாவது: தேர்தல் கமிஷன் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் சரியான வாக்காளர் பட்டியலை உறுதி செய்ய அவசியமானது. எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முன்பாக, இது குறித்து முறையாக ஆய்வு செய்திருக்க வேண்டும். நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பும் சக்திகள், இளைஞர்களைத் தூண்டிவிடுகின்றனர். அவர்கள் சதி செய்கின்றனர். அரசு மாற்றம் என்பது வன்முறை, குழப்பத்தின் மூலமாக அல்லாமல், தேர்தல்கள் மூலமாகவே நடைபெற வேண்டும். ஒவ்வொரு சமூகமும், அரசும் இளைஞர்களின் கவலைகளில் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களுடன் உரையாடல் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார்.