உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 60 முஸ்லிம் தலைவர்களுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஆலோசனை

60 முஸ்லிம் தலைவர்களுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஆலோசனை

புதுடில்லி: கடந்த 2022ம் ஆண்டு துவங்கிய ஹிந்து அமைப்புகள் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் இடையிலான தொடர்ச்சியான உரையாடலின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள 60 முஸ்லிம் மதகுருமார்கள் மற்றும் அறிஞர்களை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்தித்து பேசினார். டில்லியின் ஹரியானா பவனில் மூன்றரை மணிநேரம் நடந்த இந்த சந்திப்புக்கு அகில இந்திய இமாம் அமைப்பு ஏற்பாடு செய்தது. அதன் தலைவர் இமாம் உமர் அகமது இலியாசி சந்திப்பை ஒருங்கிணைத்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x1xd8hs5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சந்திப்பின் போது, ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக இரு மதத் தலைவர்களும் தொடர்ச்சியாக சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த சந்திப்பு தொடர்பாக வெளியான தகவலில், 'ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்த ஆலோசனை தொடர்ந்து நடைபெறும் என மோகன் பகவத் உறுதியளித்தார். சந்திப்பின்போது மோகன் பகவத்துடன் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலர் கிருஷ்ணா கோபால், மூத்த நிர்வாகிகள் ராம்லால் மற்றும் இந்த்ரேஷ்குமார் உடன் இருந்தனர். 60க்கும் மேற்பட்ட முஸ்லிம் மதகுருமார்கள் மற்றும் அறிஞர்களf பங்கேற்றனர். https://www.youtube.com/watch?v=J9YIDlTxMi4

தேசிய முக்கியத்துவம் இது தொடர்பாக இலியாசி அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்தையும், அகில இந்திய இமாம் அமைப்பு, 50வது ஆண்டு விழா கொண்டாடும்போது, இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பேச்சு நடத்த இரு தரப்பும் முயற்சி செய்தன. இதன் ஒரு பகுதியாக மோகன் பகவத் மதரஸா சென்றது முதல் நடவடிக்கை. கருத்து வேறுபாடு மற்றும் பிரிவினையை முடிவுக்கு கொண்டு வந்து நம்பிக்கையை வளர்க்கவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் வழிவகுத்துள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். இன்றைய உரையாடல் ஒரு நிரந்தர அம்சமாக இருக்கும். மதத்தலைவர்களின் வார்த்தைகளை மக்கள் கேட்பதால், கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் மசூதிகளில் இமாம்கள் மற்றும் குருகுலங்கள் மற்றும் மதரஸாக்களுக்கு இடையேயான தொடர்பை துவங்குவோம் என்று உறுதியளிக்கப்பட்டது. இது சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்க உதவும். மேலும், நாட்டின் நலனுக்காகவும் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார். 2022ம் ஆண்டும் இலியாசி அழைப்பின் பேரில், மோகன் பகவத், அகில இந்திய இமாம் அமைப்பு நிர்வகிக்கும் மதராஸாவுக்கும் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Tamilan
ஜூலை 26, 2025 18:31

எங்கு போய் ஓடி ஒளிந்தாலும் 75 ஆண்டு கால தேசே விரோத செயல்களை மறைக்க முடியாது


M Ramachandran
ஜூலை 26, 2025 17:04

இது என்னாடாது திராவிட புளுகும் கும்பல் ஒட்டு வங்கிக்கு வேட்டு வைக்கிறாங்க.


Rajalakshmi
ஜூலை 26, 2025 14:45

குண்டுவெடிப்புகள் கொலைகள் என பன்னெடுங்காலமாக செய்துகொண்டே "அமைதி மார்க்கம் என சளைக்காமல் சொல்லும் இவர்களை பார்த்து நகைப்பதா அல்லது சரமாரியாக அடிஉதைகள் வாங்கியும் இவர்களை தொடர்ந்து சளைக்காமல் நம்பும் ஆர். எஸ். எஸ். போன்ற ஏமாளி கோமாளிகளை பார்த்து நகைப்பதா ?


தஞ்சை மன்னர்
ஜூலை 26, 2025 13:24

ஹி ஹி இந்த ஆர் எஸ் எஸ் அமைப்பு மொத்தம் 100 நூறுக்கும் மேல் இருக்கும் அதில் இவர்கள் சொல்லும் அமைதி பேச்சு வார்த்தை என்பது ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆனால் மற்றவர்கள் ஒத்து கொள்ள மாட்டார்கள் அப்படி இருக்க இவர்களை எப்படி நம்புவது நம்ப வைத்து கழுத்து அறுப்பது ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிரந்தர கொள்கை அது இந்திய நாட்டின் புற்று நோய் போன்றது வரலாற்றில் பல தடவை நிரூபணம் ஆனது


vivek
ஜூலை 26, 2025 17:07

இது திராவிட கொத்தடிமைகளுக்கு பிடிக்காது தஞ்சை புண்ணாக்கு


இந்திய சக்கரவர்த்தி
ஜூலை 26, 2025 20:52

எப்பிடி முஜாஹிதீன்களின் பல ரூபங்கள் போல தானே


sankaranarayanan
ஜூலை 26, 2025 10:00

இந்த அரிய சந்திப்பை சனாதன தர்ம எதிரிகள் குறுக்கே வந்து குடைச்சல் கொடுப்பார்கள் இவர்களது ஒற்றுமையை கெடுப்பார்கள் அதில் அவர்களுக்கு ஆனந்தம் அனுபவிப்பார்கள் இரு தலைவர்கள் சேர்ந்து நல்ல முடிவை இருவருக்கும் நன்மை பயன்தரக்கூடியதாவே இருக்கட்டும் வாழ்க இந்த கூட்டு முயற்சி வளர்க இவர்களது நட்பு .


pmsamy
ஜூலை 26, 2025 09:41

தீவிரவாதிகள் எல்லாரும் சேர்ந்து நாட்டை அழிக்க போறானுங்க.


Amsi Ramesh
ஜூலை 26, 2025 09:17

நீங்கள் ஒண்டு சேர நினைத்தாலும் இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை ஓட்டு பிச்சை அரசியல்வாதிகள் காட்சிகள் அதை அனுமதிக்கமாட்டார்கள் .. சிறுபான்மையினரை பூச்சாண்டி காட்டித்தான் இவ்வளவு காலம் அவர்கள் பிழைப்பை ஓட்டினார்கள் அதற்கு பாங்கம் ஏற்பட்டால் அனுமதிப்பார்களா


நாஞ்சில் நாடோடி
ஜூலை 26, 2025 09:55

காங்கிரசும் திராவிட அடிபொடிகளும் ஒழிக்கப்படவேண்டும். பின் RSS தலைவரின் முயற்சிக்கு பலன் கிடைக்கும். நல்லிணக்கம் உருவாகும் ...


berlin
ஜூலை 26, 2025 09:13

Super


V RAMASWAMY
ஜூலை 26, 2025 08:44

பாராட்டப்பட வேண்டிய நல்ல முயற்சி.


Thiru, Coimbatore
ஜூலை 26, 2025 08:37

நிச்சயமாக இந்த செய்தி ஏற்கனவே மூழ்கி கொண்டு இருக்கும் இந்தியா கூட்டணியினருக்கு கசப்பாகவே இருக்கும் இங்கேயும் நிறைய பேரின் தூக்கம் போய் இருக்கும் அனைத்து மக்களின் ஒற்றுமை நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது... கட்டாய உடனடி தேவை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை