உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்.எஸ்.எஸ்., ஒரு தேசியவாத அமைப்பு; ஒருபோதும் முஸ்லிம் எதிர்ப்புணர்வை கொண்டிருப்பதில்லை: மோகன் பாகவத்

ஆர்.எஸ்.எஸ்., ஒரு தேசியவாத அமைப்பு; ஒருபோதும் முஸ்லிம் எதிர்ப்புணர்வை கொண்டிருப்பதில்லை: மோகன் பாகவத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''ஆர்.எஸ்.எஸ்., ஒரு தீவிரமான தேசியவாத அமைப்பு; ஒருபோதும் முஸ்லிம் எதிர்ப்புணர்வை கொண்டிருப்பதில்லை,'' என, அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், 100வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் நிகழ்ச்சி ஒன்று நேற்று முன்தினம் நடந்தது. இதில், பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: சூரியன் கிழக்கில் உதிக்கிறது. எப்போது இருந்து இந்த செயல் நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. சூரியன் கிழக்கில்தான் உதிக்கிறது என்பதற்கு நம் அரசியலமைப்பின் ஒப்புதல் தேவையா? தேவையில்லை. இதுபோல், ஹிந்துஸ்தான் ஒரு ஹிந்து தேசம்.இந்தியாவை தங்கள் தாய்நாடாக கருதுவோர், நம் கலாசாரத்தை பாராட்டுகின்றனர். ஹிந்துஸ்தான் நிலத்தில் இந்திய மூதாதையர்களின் மகிமையை நம்பும், போற்றும் நபர் உயிருடன் இருக்கும் வரை இந்தியா ஒரு ஹிந்து தேசம். இது தான், ஆர்.எஸ்.எஸ்.,சின் சித்தாந்தம். பார்லிமென்ட் எப்போதாவது நம் அரசியலமைப்பை திருத்தி, 'இந்தியா ஒரு ஹிந்து தேசம்' என்ற வாக்கியத்தை சேர்க்க முடிவு செய்தால், அது அரசின் விருப்பம். அவ்வாறு செய்தாலும், செய்யாவிட்டாலும் அதைப்பற்றி எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. அதுதான் உண்மை.

தேசியவாத அமைப்பு

பிறப்பை அடிப்படையாக கொண்ட ஜாதி அமைப்பு ஹிந்துத்வாவின் முத்திரை அல்ல. பண்பாடு மற்றும் பெரும்பான்மையாக உள்ளோரின் ஹிந்து மத தொடர்புகளை கருத்தில் கொண்டு, இந்தியா ஒரு ஹிந்து தேசம் என ஆர்.எஸ்.எஸ்., வாதாடி வருகிறது. மதச்சார்பற்ற என்ற வார்த்தை அரசியலமைப்பின் முகவுரையில் முதலில் இடம்பெறவில்லை.முன்னாள் பிரதமர் இந்திரா அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட போது, 1976ல் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வாயிலாக சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.தவறான பிரசாரம் காரணமாக, முஸ்லிம்களின் எதிரி ஆர்.எஸ்.எஸ்., என்ற பிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது, தீவிரமான தேசியவாத அமைப்பு. ஒருபோதும், முஸ்லிம் எதிர்ப்பு உணர்வை கொண்டிருப்பதில்லை.

நேரில் வந்து பாருங்க

ஆர்.எஸ்.எஸ்., பணிகளை நேரில் பார்த்த சிலர், 'நீங்கள் தேசியவாதிகள்; ஹிந்துக்களின் பாதுகாப்புக்காக வாதிடுகிறீர்கள்; அவர்களை ஒருங்கிணைக்கிறீர்கள். நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல' என, குறிப்பிடுகின்றனர். அவ்வாறு சொல்பவர்கள் எல்லாம், ஆர்.எஸ்.எஸ்.,சின் செயல்பாடுகளை நேரில் கண்டவர்கள். எனவே, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பற்றி பேசுபவர்கள், எங்கள் செயல்பாடுகளை நேரில் வந்து பார்க்க வேண்டும்.

மாற்றிக்கொள்ளுங்கள்

அப்படி ஏதாவது முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு இருப்பது தெரிந்தால், உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவ்வாறு இல்லையென்றால், ஆர்.எஸ்.எஸ்., தொடர்பான உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கருத்துகளை புரிந்துகொள்ள முடியாதவர்களின் மனதை யாராலும் மாற்ற முடியாது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சிறுபான்மையினராக வசிக்கும் ஹிந்துக்கள் பயங்கரமாக தாக்கப்படுகின்றனர். இங்குள்ள ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதை கண்டிக்க வேண்டும்; தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

NALAM VIRUMBI
டிச 24, 2025 20:37

இந்தியாவை நேசிக்கும் நபர் யாராக இருப்பினும் ஆர் எஸ் எஸ் ஐ நிச்சயம் நேசிப்பர். இது முழுமையான ஒரு தேசபக்தி இயக்கம். நம்மை ஈன்ற தாய்நாட்டை உயர்துவதில் இன்பம் காணும் தன்னலமற்ற ஒரு மாபெரும் இயக்கம் தான் ஆர் எஸ் ஐ. வளர்க அதன் பணிகள்


Kasimani Baskaran
டிச 24, 2025 04:08

இந்தியாவை வெறுப்போருக்கு மட்டுமே ஆர் எஸ் எஸ் இயக்கத்தை பிடிக்காது..


Palanisamy T
டிச 24, 2025 03:17

நம்மிடம் கொஞ்சம் வெளிப்படைத் தன்மை வேண்டும். தவறில்லை. உங்களின் சமூகப் பணிகள் வளர வேண்டும், தொடரவும் வேண்டும் .


தாமரை மலர்கிறது
டிச 24, 2025 01:40

அனைத்து சாதியினரையும் மதத்தினரையும் ஒருங்கிணைத்து, பாரதத்தில் அமைதியை நிலைநாட்டும் ஒரு சிறந்த அமைப்பு தான் ஆர் எஸ் எஸ். இந்தியாவின் வேர், சுவாசம் என்று சொல்லலாம்.


SULLAN
டிச 24, 2025 00:22

சும்மா பொய் சொல்றவங்க எல்லாம் வெட்க படனும் . பொய்யின்னா அது இப்டி இருக்கணும் இன்னிக்கு தீதிலா கருத்து சொல்ற ஆர் எஸ் புள்ளிங்கோ கருத்தை பாத்தால் உண்மை விளங்கிடும் .


Barakat Ali
டிச 23, 2025 17:57

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது ..... குறிப்பாக, அதன் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் எம்.ஆர்.எம் மூலமாக இது சாத்தியமாகிறது ..... இந்த அமைப்பு, முஸ்லிம்களை தேசியவாதக் கொள்கைகளில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ்-இன் முஸ்லிம்களுக்கான ஒரு தொடர்புப் பிரிவாகச் செயல்படுகிறது ......


திகழ்ஓவியன்
டிச 23, 2025 14:32

இந்திய சகோதரத்திற்கு தேவையில்லாத ஆணி , தூர வைத்து பார்ப்பதே அழகு , தாழம்பூ கதை தான்


Prasath
டிச 23, 2025 21:28

உன்னை போல இருந்துதான் எல்லோரும் தள்ளி நிக்கனும் முதலில் உண்மை பெயரோடு வா


தஞ்சை மன்னர்
டிச 23, 2025 14:30

முதலில் இந்த ஆண்ட புளுகு ஆகாச புளுகு விடுவதை நிப்ப்பாட்டவும் இதுவரை இந்தியாவில் ஆர் எஸ் எஸ் மற்றும் நீங்கள் பெத்து போட்டு இருக்கும் கள்ள குழந்தைகள் செய்த படுகொலை மற்றும் கலவரங்களுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள் அப்புறம் நாம் பேசிக்கொள்ளுவோம் வயதாகி விட்டது நாளொரு மேனி பொழுதொரு பொய்யாக சொல்லிக்கொண்டு இருக்காமல் போய் ஓய்வு எடுக்கவும் ....


தஞ்சை மன்னர்
டிச 23, 2025 14:28

முதலில் இந்த ஆண்ட புளுகு ஆகாச புளுகு விடுவதை நிப்ப்பாட்டவும் இதுவரை இந்தியாவில் ஆர் எஸ் எஸ் மற்றும் நீங்கள் பெத்து போட்டு இருக்கும் கள்ள குழந்தைகள் செய்த படுகொலை மற்றும் கலவரங்களுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள் அப்புறம் நாம் பேசிக்கொள்ளுவோம் வயதாகி விட்டது நாளொரு மேனி பொழுதொரு பொய்யாக சொல்லிக்கொண்டு இருக்காமல் போய் ஓய்வு எடுக்கவும்


Suresh
டிச 23, 2025 14:23

அரசியல் அமைப்பில் இந்தியா இந்துநாடு என்று திருத்தவேண்டியது அவசியம். பெண்டாட்டிக்கு தாலி கட்டுவது எவ்வளவு அவசியமோ அதேபோல.


சமீபத்திய செய்தி