உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய கலாசாரத்தின் ஆலமரமாக திகழும் ஆர்.எஸ்.எஸ்.,: பிரதமர் மோடி புகழாரம்!

இந்திய கலாசாரத்தின் ஆலமரமாக திகழும் ஆர்.எஸ்.எஸ்.,: பிரதமர் மோடி புகழாரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: 'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, அழிவற்ற இந்திய கலாசாரத்தின் ஆலமரமாக திகழ்கிறது,' என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு வந்த பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவாருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். மாதவ் நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.அதை தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:ஆர்.எஸ்.எஸ். நமது சனாதன தர்மம், ஒற்றுமை மற்றும் தேசியத்துவத்தின் அடையாளம். இந்தியாவின் அழிவற்ற கலாசாரத்தின் ஆலமரமாக திகழ்கிறது. அதே நேரத்தில் நவீன காலத்தின் சவால்களுக்கு தீர்வுகளும் கூறுகிறது. சுகாதாரம், கல்வி மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல துறைகளில் ஆர்எஸ்எஸ்ஸின் சேவைப்பணிகள் மகத்தானது.ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் நாட்டின் பல்வேறு துறைகளிலும் பகுதிகளிலும் தன்னலமின்றி பணியாற்றி வருகின்றனர். மறைந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மாதவ்ராவ் சதாசிவ்ராவ் கோல்வால்கரின் நினைவாக மாதவ் நேத்ராலயா 2014ல் நிறுவப்பட்டது.ஏழைகளில் ஏழைகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வதே அரசாங்கத்தின் கொள்கை. பா.ஜ., ஆட்சியில் செயல்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது .எங்கள் அரசாங்கம் மக்களுக்கு மேலும் சிறந்த மருத்துவர்களை வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சையைப் பெறுகின்றனர்,இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

அப்பாவி
மார் 31, 2025 17:14

இப்போ பா.ஜ வுக்கு அடுத்த தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதுக்கு ஆர்.எஸ்.ஏஸ் சின் ஆசி வேண்டும். அதுக்குதான் திடீர் விஜயம். அண்ணாச்சி கூட தலைவர் ஆக வாய்ப்பு இருக்காம்.


venugopal s
மார் 31, 2025 15:34

மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களை படுகொலை செய்யும் இந்திய கலாசாரத்தை கூறுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?


N Sasikumar Yadhav
மார் 31, 2025 10:57

தேசதுரோக கும்பல்களுக்கும் சிலிண்டர் வெடித்து பழகுபவன்களுக்கும் ஆர்எஸ்ஸை கண்டால் பிடிக்காது .


N.Purushothaman
மார் 31, 2025 08:37

ஒரு இயக்கம் தன்னெழுச்சியாக தன்னலமின்றி நூறு ஆண்டுகள் கடந்து இன்றும் இளமையாகவே இயங்கி கொண்டு இருப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல ...சிறந்த திட்டமிடல் மற்றும் தொலை நோக்கு பார்வை இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ...


Sampath Kumar
மார் 31, 2025 07:46

ப்ராமண கலாசாரத்தின் ஆணி வேறு என்று சொல்வது தான் மிக பொருத்தமாக இருக்கும்


Mediagoons
மார் 30, 2025 22:11

கொடுங்கோல் மன்னர்களின் பரம்பரை .


Mediagoons
மார் 30, 2025 22:06

நாட்டின் கடன் சுமை இப்பூவுலகம் கண்டிறாதது . மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனின் கடன் சுமையும் அதற்கும் மேல் . வாங்கிய கடனுக்காக படித்த படிக்காத ஒவ்வொரு இந்திய குடிமகனும் தன சுயமரியாதையை இழந்து கார்போரேட்டு குண்டர்கள், பொருளாதார குண்டர்கள் உள்பட பலதரப்பட்ட குண்டர்களிடமும் அந்நியர்களிடமும் கையேந்தவேண்டிய நிலை . ஏறத்தாழ ஒரு கொத்தடிமைகளைப்போல் உள்ளார்கள். படித்து பட்டம்பெற்றவர்களின் நிலையம் இப்படித்தான் . அனைத்தும் இந்துமதம், இந்திய கலாச்சாரம் என்ற பெயரில் திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்டுள்ளது .


Kumar Kumzi
மார் 30, 2025 22:53

இந்தியாவை பற்றி பேச என்ன தகுதி இருக்கு


Mediagoons
மார் 30, 2025 22:00

இந்தியாவை இனி யாராலும் மீட்டெடுக்க முடியாது


Mediagoons
மார் 30, 2025 21:56

அன்று அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் நாடுகடந்த வந்து இந்திய கலாசாரத்தை கெடுத்தார்கள் .


Mediagoons
மார் 30, 2025 21:48

மோடி அரசு தம்பட்டம் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கும், நாட்டில் உள்ள சட்டதிட்டங்களுக்கு, நாட்டில் நடக்கு எதற்கும் இந்திய காலாச்சாரத்திற்கு தொடர்பு உள்ளதா?


சமீபத்திய செய்தி