உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் ஆளுங்கட்சி தோல்வி... குஜராத், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி வெற்றி; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்

கேரளாவில் ஆளுங்கட்சி தோல்வி... குஜராத், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி வெற்றி; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்

புதுடில்லி: கேரளாவின் நிலம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.கடந்த ஜூன் 19ம் தேதி கேரளாவின் நிலம்பூர் தொகுதிக்கும், மேற்கு வங்கத்தின் கலிகஞ்ச் தொகுதிக்கும், பஞ்சாப்பின் லூதியானா மேற்கு தொகுதிக்கும், குஜராத்தின் விசவதார் மற்றும் காதி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மேற்குவங்கம் மற்றும் கேரளாவுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த இடைத்தேர்தலை அனைத்து கட்சிகளும் முன்னோட்டமாக பார்க்கின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uwcq9t3j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.

நிலம்பூர்

கேரளாவின் நிலம்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஆர்யதன் ஷூகாத் ஆரம்ப முதலே முன்னிலையில் இருந்தார். ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 11,077 ஓட்டுகள் வித்தியாசத்தில் பெற்றார். மொத்தமாக அவர் 77,737 ஓட்டுகளை வாங்கியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 66,660 ஓட்டுகளையும், சுயேட்சையாக போட்டியிட்ட அன்வர் 19,760 ஓட்டுகளையும் பெற்றனர். பா.ஜ., 8.648 ஓட்டுகளை மட்டுமே பெற்று 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நிலம்பூர் தொகுதி காங்., எம்.பி., பிரியங்காவின் வயநாடு லோக்சபா தொகுதிக்குள் வருவதால், இந்தத் தேர்தல் முடிவு காங்கிரசுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

லூதியானா மேற்கு

டில்லி சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஆம்ஆத்மி போட்டியிடும் முதல் தேர்தல் இதுவாகும். இந்தத் தொகுதியை மீண்டும் கைவசப்படுத்த ஆம்ஆத்மி போராடியது. அதன்படி, ஆம்ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 30,237 ஓட்டுகளைப் பெற்ற வெற்றி பெற்றார். 8,697 ஓட்டுகள் வித்தியாசமாகும். காங்கிரஸ் வேட்பாளர் பாரத் பூசன் அஷூ 21,540 ஓட்டுகளும், பா.ஜ., வேட்பாளர் ஜீவன் குப்தா 17,435 ஓட்டுகளையும் பெற்றனர்.

குஜராத்

விசாவதர் தொகுதியில் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்ட பூபேந்திர பயானி, கடந்த 2023ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.,வில் இணைந்து விட்டார். எனவே, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 2007ம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியை பா.ஜ., வென்றதே இல்லை. எனவே, இந்த முறை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று கிர்த்தி படேலை பா.ஜ., களமிறக்கியது. ஆம்ஆத்மி சார்பில் கோபால் இதாலியாவை நிறுத்தியது. ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜ., - ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், ஆம்ஆத்மி வேட்பாளர் கோபால் இதாலியா 75,942 ஓட்டுகளை பெற்றார். இதன்மூலம், 17,554 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ஜ., வேட்பாளர் கிர்த்தி படேல் 58,388 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் 5,501 ஓட்டுகளையும் பெற்றுள்ளனர். இதன்மூலம், விசாவதர் தொகுதி மீண்டும் ஆம்ஆத்மி வசம் சென்றது. அதேபோல, காதி தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., கர்சன் சோலாங்கி மறைவை தொடர்ந்து, இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தனி தொகுதியான காதியில் பா.ஜ., சார்பில் ராஜேந்திர சவாடா போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் ரமேஷ் சவாடாவும், ஆம் ஆத்மி சார்பில் ஜெக்தீஷ் சவாடாவும் களமிறங்கினர். ஓட்டு எண்ணிக்கை முடிவில் பா.ஜ.,வின் ராஜேந்திரகுமார் சவாடா 39,452 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 99,742 ஓட்டுகளை வாங்கினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் சவாடா, 60,290 ஓட்டுகளையும், ஆம் ஆத்மி வேட்பாளர் ஜெகதீஷ் சவாடா 3,090 ஓட்டுகளையும் பெற்றார்.

கலிகஞ்ச்

திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-, நசாருதின் அகமது மறைவை தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அவரது மகள் ஆலிபா அகமது திரிணமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். அவர் மொத்தம் 56,566 ஓட்டுகளைப் பெற்றார். பா.ஜ., வேட்பாளர் ஆஷிஷ் கோஷை (25,412 ஓட்டுகள்)விட 31,154 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் கபில் உதின் 19,102 ஓட்டுகளை பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

K.Uthirapathi
ஜூன் 23, 2025 20:44

வேணுகோபால் நினைப்பது, முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல் உள்ளது. மத்திய ஆட்சியிலிருந்து, BJP யை இறக்குவது இனி நடக்காத காரியம். BJP மீதுள்ள பற்றுதலால் இதை சொல்லவில்லை, வடகிழக்கு யூனியன் பிரதேசங்கள் தவிர மற்ற அனைத்து பகுதிகளுக்கும்‌ நான் செல்கிறேன், வட இநாதியாவில் அனைத்து மாநிலங்களிலும் நண்பர்கள் இருக்கிறார்கள்.


அப்பாவி
ஜூன் 23, 2025 19:21

எந்த இடத்திலும் ஆளுங்கட்சி ஆட்சி சரியில்லை.மக்கள் காண்டாயிட்டாங்க.


Mario
ஜூன் 23, 2025 18:33

குஜராத் மற்றும் டெல்லி ஆளுங்கட்சி தோல்வி Ha ha ஹா


V Vaidhya
ஜூன் 23, 2025 20:24

குஜராத்தில் அவரவர் தகுதிகளை அவரவர் தக்க வைத்துள்ளனர்


என்றும் இந்தியன்
ஜூன் 23, 2025 17:51

EVM மெஷின் மிக மிக மோசமாக தில்லாலங்கடி வேலை செய்து வைக்கப்பட்டிருக்கின்றது ஆகவே தான் அது காங்கிரஸ் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது போல காண்பிக்கின்றது. . ஆகவே இதனால் தெரிவது என்னவென்றால் EVM தேர்தல் கமிஷன் சொல்கின்றபடி வேலை செய்கின்றது - இப்படிக்கு ரவுல் வின்சி alias ராகுல் காந்தி


Narayanan Muthu
ஜூன் 23, 2025 20:45

இடை தேர்தலில் தோல்வி பெறுவதும் பொது தேர்தல்களில் வெற்றிபெறுவதும் பிஜேபி தேர்தல் முறைக்கேடுகளில் ஈடுபடுவதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இப்ப தெரியுதா இவனுங்க ஏன் ஒரே நாடு ஒரே தேர்தல்ன்னு கதறுறானுங்கன்னு. தேர்தல் ஆணையத்தை கைக்குள் போட்டுகொண்டு மொத்தமா தேர்தல் தகிடுதத்தம் செய்து வெற்றி பெறத்தான்


GUNA SEKARAN
ஜூன் 23, 2025 16:58

அவரவர் தொகுதியில் அவரவர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 23, 2025 16:44

விசாவதர் தொகுதியில் 2007 முதல் பாஜக வென்றதில்லை மற்ற இடங்களில் ஆளும் கட்சியின் வேட்பாளர்கள் வென்றது ஒரு சாதனை இல்லை....பாஜக ஓட்டுக்கள் அப்படியேதான் இருக்கு..... அதற்குள் சில தற்குறிகள் பாஜகவின் வீழ்ச்சி தொடங்கி விட்டது என்று புளங்காகிதம் அடைகிறார்கள்.....என்றைக்குமே பாஜகவிற்கு ஏறு முகம் தான்.....அடுத்த வருடம் தமிழக ஆளுங்கட்சி வாங்கும் அடி இனி ஜென்மத்திற்கும் எழுந்திரிக்காது..... ஏனெனில் தலைமை எல்லாம் திஹாரில் இருப்பார்கள்..... கூட்டணி கட்சிகள் இப்பொழுதே அதிமுக பாஜக விடம் துண்டு போட்டு வைப்பது நல்லது.....!!!


Balasubramanian
ஜூன் 23, 2025 16:30

குஜராத் வெற்றி கேஜ்ரிவால் மழைக்கால தவளை மாதிரி மீண்டும் கத்த ஆரம்பித்து விடுவார்


venugopal s
ஜூன் 23, 2025 15:32

பாஜகவின் அழிவு காலம் தொடங்கி விட்டது போல் உள்ளது. கேரளாவில் நான்காம் இடம், பஞ்சாபில் மூன்றாம் இடம், குஜராத்தில் ஒரு தொகுதியில் தோல்வி, மேற்கு வங்காளத்திலும் தோல்வி. தமிழ்நாடு காத்துக் கொண்டு இருக்கிறது!


Shekar
ஜூன் 23, 2025 16:37

ஆமாங்க விரைவில் ராகுல்ஜி பிரதமர், சோனியாஜி ஜனாதிபதி, ப்ரியங்காஜி துணை ஜனாதிபதி, ராபர்ட் ஜி நிதி அமைச்சர்.


கண்ணன்,மேலூர்
ஜூன் 23, 2025 16:47

ஆமா திமுகவின் அழிவு காலத்திற்காக தமிழகம் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 23, 2025 19:58

அப்பர் வீட்டுப்பணமான்னு கேட்டவரும் அப்பர் வீட்டுப் பணம் உள்ளவரும் போகிற இடங்களில் எல்லாம் துணியால் மறைக்கிறார்களே , வெற்றியை பார்க்க வேண்டாம் என்றுதானே


JaiRam
ஜூன் 23, 2025 15:25

இப்பொழுது ராகுல் மாபியா ஓட்டு மெஷினை பற்றி பேச மாட்டார்


A viswanathan
ஜூன் 23, 2025 19:46

பிஜேபி ஆணவத்துடன் இருந்தால் கடைசியில் காங்கிரஸ் மாதிரி ஆயிவிடும்


Narayanan Muthu
ஜூன் 23, 2025 20:49

இடை தேர்தலில் பிஜேபி முறைகேடு செய்யாது. அதனால் உள்ளது உள்ளபடி முடிவு வந்துள்ளது. குறைந்த தொகுதி தேர்தல்களில் முறைகேடு செய்தால் வசமாக மாட்டி கொள்வார்கள். அப்புறம் எல்லாமே பல்லை இளிக்க ஆரம்பித்துவிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை