உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு: ஒரு டாலர் ரூ.85ஐ தாண்டியது

வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு: ஒரு டாலர் ரூ.85ஐ தாண்டியது

புதுடில்லி: இதுவரை இல்லாத அளவாக, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை கண்டுள்ளது. ஒரு டாலர், 85.08 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.கரன்சி சந்தையில் நேற்று முன்தினம் வர்த்தக முடிவில், ரூபாய் மதிப்பு, 84.94 ஆக இருந்தது. நேற்று வணிகத் தொடக்கத்திலேயே, ரூபாய் மதிப்பு ஒரு டாலர் 85.03 ரூபாயாக சரிந்தது. பிறகு, வர்த்தக நிறைவில் அது, 85.08 ஆக வீழ்ச்சி அடைந்தது.அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், கடன் வட்டி விகிதத்தை கால் சதவீதம் குறைத்தது. இதனால், அமெரிக்க டாலர் மீது சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியது. இதன் தொடர்ச்சியாக டாலர் மதிப்பு உயர்ந்தது; கூடவே, ரூபாய் மதிப்பு சரிவும் புதிய உச்சத்தை தொட்டது.உள்நாட்டு பொருளாதார நிலவரம் மட்டுமின்றி; சர்வதேச காரணிகளாலும் ரூபாய் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில், உள்நாட்டு மொத்த உற்பத்தியான, ஜி.டி.பி., வளர்ச்சி 5.4% ஆக குறைந்த நிலையில், இறக்குமதி கடுமையாக அதிகரித்து, ஏற்றுமதி குறைந்து, வர்த்தக பற்றாக்குறை அதிகரித்தது. இதன் காரணமாக இந்திய சந்தைகளில், அன்னிய மற்றும் உள்நாட்டு முதலீடுகள் குறைந்ததும், ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணமானது.மேலும், சர்வதேச கரன்சிகளுக்கு எதிராக டாலர் தொடர்ந்து வலுப்பெற்று வருவதும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை அதிகரிக்கிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை குறைத்து அறிவித்தது, ரூபாய் மதிப்பில் மட்டுமின்றி, இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகத்திலும் எதிரொலித்தது. அன்னிய முதலீட்டாளர்கள் உட்பட பலரும், அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்ததால், வர்த்தக தொடக்கத்தில், சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 300 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டன. பின்னர், சிறிது மீண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தன.

2024ல் இதுவரை ரூபாய் மதிப்பு 2 சதவீதம் வீழ்ச்சி

n இறக்குமதி அதிகரிப்பால் அதிக டாலர் வெளியேறி ரூபாய் பாதிப்புn 2025ல் ரூபாய் மதிப்பில் சரிவு தொடர வாய்ப்பில்லை என ஆய்வாளர்கள் கணிப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

KRISHNAN R
டிச 20, 2024 17:33

ஏற்று இப்போ சைலண்டா இருக்கும்.. இறக்கு குதிக்கும்.. மற்றொரு நேரம்.. ஏற்று குதிக்கும் சைலண்டா ஆகிடும்


Nethiadi
டிச 20, 2024 16:40

நம் நாட்டோட சாபக்கேடு என்னைக்கு ஒழியுதோ அன்னைக்கே விடிவு காலம்.


veera
டிச 20, 2024 16:32

திருப்பூரில் உள்ள தோல் மற்றும் ஆடை ஏற்றுமதி செய்பவர்களுக்கு. நல்ல லாபம் வரும்...இது இந்த சொண்கி கூட்டத்துக்கு தெரியுமா


venugopal s
டிச 20, 2024 13:43

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது தான் ஞாபகம் வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு குறையவில்லை அமெரிக்க டாலர் மதிப்பு தான் கூடுகிறது என்றார். இதுவரை எந்த நிதியமைச்சரும் கண்டுபிடிக்காத காரணம்.அதையும் நம்பும் சங்கிகள் இருக்கின்றனர். எல்லாம் நம் தலையெழுத்து!


ஆரூர் ரங்
டிச 20, 2024 15:22

எல்லா நாட்டு செலாவணிகளும் டாலர் ஒப்பீட்டளவில் சரிந்துள்ளன. அதற்கு யு எஸ் நாட்டின் கொள்கை காரணம். நமது நாட்டு செலாவணி மட்டும் சரிந்தால் மட்டுமே குறை கூற முடியும். இதற்கு நாம் கூடிய அளவுக்கு உள்நாட்டுப் பொருட்களை மட்டுமே வாங்கி ஆதரிக்க வேண்டும்.


veera
டிச 20, 2024 15:47

ஏற்றுமதியலரகுகு ...லாபம்.....இருக்குமதி செய்பவர்க்கு சிறிது நஸ்டம்....இது தெரியாத வேணுகோபால் ஒரு பாவம் கொத்தடிமை


vadivelu
டிச 20, 2024 16:23

பாவமய்யா நீங்க, இப்படி புலம்ப விட்டுட்டாங்களே. 2014 போய், 19 ம் போய் , 24 ம் போச்சு, இன்னும் இப்படி பொய் கொண்டே இருக்கும். புலம்பியாவது ஓரளவு மகிழ்ச்சி கிடைக்கட்டும்


V வைகுண்டேஸ்வரன்
டிச 20, 2024 11:53

When the Indian rupee value farms against USD, its clear representation of the failure of the Indian govt and its policies - இதை நான் சொல்லவில்லை. 2013 ல், அதாவது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது மோடி சொன்னது. இப்போது அவரது கொத்தடிமைகளும், நிர்மலாவின் அடிப் பொடிகளும், தமிழ் நாட்டை காரணம் சொல்லி எழுதுவது அறிவற்ற வாதம் என்பதை அறிவுள்ள பாஜக காரரே சொல்வார். 22மாநிலங்கள் கொண்ட ஒரு தேசத்தின் அந்நிய செலாவாணி யை ஒரு மாநிலம் பாதிக்கிறது என்றால் அது தவறு. ஏனெனில், ella மாநிலங்களின் அயல் நாட்டு வணிகம் மொத்தமும் ஒன்றிய அரசின் Rules and Regulations, Taxes and Duties படி தான் இயங்குகிறது. Do accept that, this is failure of bjp government.


veera
டிச 20, 2024 13:59

do you have any knowledge about US Federal Reserve?? படித்து புரிந்து பிறகு சொல்லவும்...


அப்பாவி ராவ்
டிச 20, 2024 14:20

மோடி ஆட்சியில் எது நடந்தாலும் ராஜதந்திரம் ஹை. தேஷ்பக்தி ஹை. கேள்வி கேக்குறவன் சீன கைக்கூலி ஹை. தேஷ் துரோகி ஹை.


Kasimani Baskaran
டிச 20, 2024 10:42

சாராயம் விற்பது, போதைப்பொருள் கடத்துவது, சினிமா எடுப்பது, அந்நிய நாட்டின் லூலூ முதலீடு போன்றவை மூலம் தமிழகம் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவை எட்டிவிடும் என்று நம்பும் அறிவாளிகள் இருக்கும் வரை எப்படி வெளங்கும்?


சாண்டில்யன்
டிச 20, 2024 11:37

ஒரு மாநிலத்தால் இந்திய பொருளாதாரமே சீர்கெட்டு பணமதிப்பை சரிந்துவிட செய்ய முடியும் என்று நம்பும் அறிவாளிகள் இருக்கும் வரை எப்படி வெளங்கும்?


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 20, 2024 12:26

ஒரு மானஸ்தன் டாலர் 60 க்கு கொண்டுவருவேன் என்று சொல்லி 12 வருடம் ஆகுது அவரை எங்காவது பார்த்தேர்களா


Narayanan Muthu
டிச 20, 2024 10:35

எந்த நாட்டில் மோசமான ஆட்சியோ அங்குதான் பணமதிப்பு வீழ்ச்சி அடையும்.


vadivelu
டிச 20, 2024 11:07

சரிவை நோக்கி தங்கம் விலை 3 நாட்களில் சவரனுக்கு ரூ.880 குறைவு. பாகிஸ்தானில், ஐரோப்பாவில், உலகம் முழுதும் அமெரிக்க டாலரின் மதிப்பால் அந்தந்த நாடுகளின் பணம் மதிப்பு குறைந்து விட்டது. இனி இந்தியர்கள் எதுவும் இறக்குமதி செய்ய வேண்டாம், ஏற்றுமதி செய்யுங்கள். இந்தியர்களுக்கு பெருத்த நஷ்டம் இல்லை. மற்ற நாடுகள் பெட்ரோலும் டாலர் கொடுத்துதான் வாங்க வேண்டும். Narayan Muthu அதிர்ஷ்டசாலி பெட்ரோல் விலை அதிகம் என்றது, சாப்பிட்டிற்கு கஷ்டம் இல்லை. தயவு எய்து எந்த பொருளிலும் வெளி நாடிகளில் இருந்து வர வாழைக்கா யஹ்ர்ர்கள். முடிந்தால் நீங்கள் தயாரித்த பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து நனறாக சம்பாரியுங்கள்.


hari
டிச 20, 2024 11:09

எந்த ஆட்சியில் டாஸ்மாக் அதிகமோ அங்கே நாராயண முத்து இருப்பார்


அப்பாவி
டிச 20, 2024 09:54

பொருளாதாரம் ஒசந்துச்சுன்னா ஜீ யிட சானர்த்தியம்.ராஜ தந்திரம். கீழே விழுந்திச்சுன்னா டீப் ஸ்டேட் அமெரிக்க சதி. இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்காத அயல்நாட்டினரின் சதி.


சுராகோ
டிச 20, 2024 08:19

நிஜமாகவே நீ அப்பாவியா இல்லை அப்பாவி போல் பெயர் வைத்து 200 ரூபாய் வாங்கும் காரியவாத்தியா?


V வைகுண்டேஸ்வரன்
டிச 20, 2024 11:45

அவரோட பதிவுக்கு பதிலோ, விளக்கமோ எழுத, சுராகோ உனக்கு அறிவு இருந்தால் எழுது. அதை விட்டுட்டு அந்த வாசகர் மீதான தனிமனித விமர்சனம் ஏன் எழுதுகிறாய்?? எந்த கட்சியும், ஆதரவா கருத்து போடறாவனுக்கெல்லாம் பணம் தரும் அளவுக்கு அறிவுகெட்டவர்கள் இல்ல என்று நான் 200 முறை விளக்கி எழுதி விட்டேன். இருந்தும் புரிந்து கொள்ளாமல் திமுக 200 ரூபாய் கொடுப்பதாக சற்றும் மூளை இல்லாதவர் போல எழுத வெட்கமாக இல்லையா???


Kasimani Baskaran
டிச 20, 2024 07:40

ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று உருட்டியதில் டாலர் மேலே போய்விட்டது. ஒருவேளை 80 ட்ரில்லியன் ரூபாய் பொருளாதாரம் என்று உருட்டி இருந்தால் ரூபாய் பலமாக இருந்திருக்குமோ என்னவோ. சாராயம் காய்ச்சுவது, போதைப்பொருள் கடத்துவதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்தி விட முடியும் என்று நம்பும் உடன்பிறப்புக்கள் இருக்கும் வரை டாலர் பலம் பெறுவது தொடரும்.


Sidharth
டிச 20, 2024 11:05

ஆஹா உங்க அறிவே அறிவெண்ணெ ஜி வந்தா டாலர் 40 ரூபாய்க்கு வருன்னு உருட்டுன யோக்கியன் யாரு


புதிய வீடியோ