உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 8 மாதங்களில் இல்லாத புதிய உச்சம் தொட்டது ரூபாய் மதிப்பு

8 மாதங்களில் இல்லாத புதிய உச்சம் தொட்டது ரூபாய் மதிப்பு

- நமது சிறப்பு நிருபர் - அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 மாதங்களில் இல்லாத புதிய உச்சமாக 92.23 என்ற நிலையை அடைந்தது. நடப்பு நிதியாண்டின் அனைத்து இழப்புகளையும் ஈடுகட்டியுள்ளது. உள்நாட்டு பங்குச்சந்தையின் வலுவான ஏற்றம், அன்னிய முதலீடு அதிகரிப்பு மற்றும் சர்வதேச அளவில் டாலர் குறியீடு சரிந்தது ஆகியவையே ரூபாயின் இந்த எழுச்சிக்கு மிக முக்கிய காரணங்களாகும்.ரூபாய் மதிப்பு உயர்வது கச்சா எண்ணெய், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவும். அதேசமயம், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் ஐ.டி., துறை நிறுவனங்களின் வருவாயில் இது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.எனவே, ஐ.டி. பங்குகளில் முதலீடு செய்பவர்கள் குறுகிய கால ஏற்ற இறக்கங்களை பார்க்காமல், வலுவான 'ஹெட்ஜிங்' பாதுகாப்பு கொண்ட நிறுவனங்களை தேர்ந்தெடுத்து கவனமாக செயல்படுவது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். உலகளாவிய முதலீட்டாளர்கள் பிற நாடுகளில் முதலீடு செய்வதை விட இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ