உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ :பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரில் நம் ராணுவம் நடவடிக்கை எடுத்தது. இதில் அந்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.இந்த விஷயத்தில், நம் தரப்புக்கு உலக அரங்கில் ஆதரவு திரட்டவும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானின் செயல்கள் குறித்து ஆதாரத்துடன் விளக்கவும் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. தி.மு.க., - எம்.பி., கனிமொழி தலைமையிலான குழுவினர் நேற்று ரஷ்யா சென்றனர். இக்குழுவில் பா.ஜ., - எம்.பி., பிரிஜேஷ் சவுதா, சமாஜ்வாதி எம்.பி., ராஜீவ் ராய் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மாஸ்கோ சென்ற குழுவை ரஷ்ய வெளியுறவு துணை அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ வரவேற்றார். அதன் பின் ரஷ்ய பார்லிமென்டின் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் உடனான கூட்டத்தில், கனிமொழி தலைமையிலான எம்.பி.,க் கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை ரஷ்ய தரப்பு அதிகாரிகள் கண்டித்ததுடன், பயங்கரவாதத்தை ஒடுக்கும் இந்தியாவின் முயற்சிக்கு துணை நிற்போம் என உறுதி அளித்தனர். ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு கனிமொழி தலைமையிலான குழு இன்று ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியா செல்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Narasimhan
மே 24, 2025 13:06

எவ்வளவு நாள்தான் இங்க உள்ள கேன்டீனில் பஜ்ஜி பகோடா சாப்பிடுவது. பிட்ஜா பர்கரும் சாப்பிட்டு வரட்டுமே.


அப்பாவி
மே 24, 2025 09:00

அடுத்த எஸ்400 ஆர்டர் போகணுமில்லே. இதே புட்டின் தான் 2023 ல துருக்கிக்கு S400 களை வித்தாரு. அவை பாகிஸ்தானுக்கு கைமாறினாலும் மாறலாம்.


Perumal Pillai
மே 24, 2025 07:57

Government sponsored ullasa payanam. An exercise in futility.


Kasimani Baskaran
மே 24, 2025 07:50

முந்தய ரிஷ்ய பர்வதம்தான் இக்கால ரஷ்யா, எக்காலமும், யார் யார் ஆட்சி, அதிகாரத்துக்கு வந்தாலும் அவர்கள் வழிவந்தவர்கள் கூட புண்ணிய பூமியான இந்தியாவுக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.