ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ.30,000 கோடியாக அதிகரிப்பு; அமெரிக்க மிரட்டலுக்கு பணியாத இந்தியா
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவின், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 30,015 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஜூலையில் கிட்டத்தட்ட 28,000 கோடி ரூபாயாக இருந்தது.ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் வாயிலாக, உக்ரைனுக்கு எதிரான அந்நாட்டின் போருக்கு நிதியுதவி வழங்குவதாக, இந்தியா மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்காவின் 25 சதவீத வரி மீது, கூடுதலாக 25 சதவீதம் அபராத வரி விதிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x06db9ji&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0