உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்.வி., சாலை - பொம்மசந்திரா ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்

ஆர்.வி., சாலை - பொம்மசந்திரா ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்

பெங்களூரு: புத்தாண்டு துவக்கமான ஜனவரியில், ஆர்.வி., சாலை - பொம்மசந்திரா பாதையில், மெட்ரோ ரயிலின் வர்த்தக போக்குவரத்து துவங்கவுள்ளது. இது ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இது தொடர்பாக, பெங்களூரு மெட்ரோ நிறுவன உயர் அதிகாரிகள் கூறியதாவது:பயணியர் எதிர்பார்த்த படி, ஆர்.வி.சாலை - பொம்மசந்திரா பாதையில், புத்தாண்டு ஜனவரியில் மெட்ரோ ரயிலின் வர்த்தக போக்குவரத்து துவங்கவுள்ளது. இன்போசிஸ் உட்பட, ஆயிரக்கணக்கான ஐ.டி., - பி.டி., நிறுவனங்களுக்கு இணைப்பு ஏற்படுத்தும்.குறிப்பாக ஓட்டுனர் இல்லாமல், 19.15 கி.மீ., துாரமுள்ள பாதையில் மெட்ரோ ரயில் இயங்கும். ஆர்.வி.சாலை - பொம்மசந்திரா இடையே தொடர்பு ஏற்படுத்தும். இப்பாதையில் 16 நிறுத்தங்கள் உள்ளன. ரயில் பெட்டிகளில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன் பகுதியில் இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இந்த மெட்ரோ ரயில், உயரமான பாதையில் மட்டும் இயக்கப்படும். சாலை மேம்பாலம், அதன் மீது தண்டவாளம் அமைந்துள்ளது. இது டபுள் டெக்கர் மேம்பாலமாகும். ஏற்கனவே சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலுக்கு, ரயில்வே பாதுகாப்பு கமிஷனரும் ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்துள்ளார்.ஆர்.வி., சாலை - பொம்மசந்திரா இடையிலான பாதையில், மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கினால், லட்சக்கணக்கான மென் பொறியாளர்கள், வாகன பயணியருக்கு உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி