உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெய்சங்கர் உள்ளார். இவர் 1977ல் இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்தார். 1985ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார். தற்போது, குண்டு துளைக்காத கார் மூலம் ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. ஜெய்சங்கருக்கு ஏற்கனவே மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமாண்டோக்களால் வழங்கப்படும் Z-பிரிவு பாதுகாப்பு உள்ளது. 24 மணி நேரமும் அவரைப் பாதுகாக்க 33 கமாண்டோக்கள் கொண்ட குழு நிறுத்தப்பட்டுள்ளது.தற்போது ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு எல்லையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்த நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

essemm
மே 14, 2025 21:04

அவருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு கொடுப்பதில் தவறேதுமில்லை. இங்கே கேடு கெட்ட அரசியல்வாதிக்கெல்லாம். z பிரிவு வழங்கும் போது. ஒரு கௌரவமான ராஜாதந்திரிக்கு பாதுகாப்பை அதிகப்படுத்திகொள்வதென்பதில் இந்தியர்களாகிய எங்களுடைய வரிப்பணம் ஒரு நல்ல உபயோகத்திற்கு தானே செல்கிறது. பரவாயில்லை. jai ஹிந்த்


தமிழ்வேள்
மே 14, 2025 20:32

இந்தியாவில் உள்ள லோக்கல் கட்சிகளின் ஆதரவு உள்ள ஜிஹாதிகளால் ஆபத்து வர வாய்ப்பு அதிகம் உள்ளது...


Rathna
மே 14, 2025 16:35

உலக ஏகாதிபத்யங்களை - அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் கபட நாடகங்களை முதலில் வெளிப்படுத்திய இந்தியா வெளி உறவு துறை அமைச்சர். உள் மற்றும் பாகிஸ்தானிய ஜிஹாதிகளால் ஆபத்து இருக்கும்.


N Annamalai
மே 14, 2025 15:03

அவசியம் செய்வது மிக நல்லது .நாட்டுக்கு நல்லது .இவரால் நாடு நலம் பெற்றுள்ளது .நீடுழி வாழ வேண்டும் .


PATTALI
மே 14, 2025 13:05

பிரதமர் ஆகும் தகுதியும் அவருக்கு உள்ளது. ஏன் பிரதமர் வாய்ப்பு கிடைக்கக்கூடாதா? கிடைத்தாலும் கிடைக்கலாம். .


Kudandhaiyaar
மே 14, 2025 11:15

மிகவும் தேவை. அவரின் சேவை இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு தேவை. பாதுகாப்பு அவசியம். அவர் மன்மோகன் சிங்க் போல பல ஆண்டுகள் அரசில் அங்கம் வகிக்கக்கூடியவர். இன்னும் கடைசியாக குடியரசு தலைவர் ஆகக்கூடியவர்.


SUBBU,MADURAI
மே 14, 2025 12:17

இன்னும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி