உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!

திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை: திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (ஆக.24) திறக்கப்பட்டது. ஆக., 28 வரை நடை திறத்திருக்கும்.நேற்று மாலை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து, தீபம் ஏற்றினார். தொடர்ந்து, 18 படிகளின் முன்புறமுள்ள ஆழியில் தீ வளர்க்கப்பட்டது. ஆக.25 அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்த பின், நெய் அபிஷேகம் தொங்கும். அதன் பின், வழக்கமான பூஜைகள் நடக்கும். ஆக., 26 திருவோண நாளில் பக்தர்களுக்கும் தேவஸ்வம் ஊழியர்களுக்கும் ஓணம் விருந்து வழங்கப்படும். கடந்த ஆண்டுகளில் தேவஸ்வம் போர்டு ஊழியர்கள் மற்றும் மேல்சாந்தி சார்பில் ஓணம் விருந்து நடந்து வந்தது. ஆனால், இதன் பெயரில் நடைபெறும் பண வசூலை தடுப்பதற்காக, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, இந்த ஆண்டு முதல் நேரடியாக ஓணம் விருந்து வழங்கும் என்று அறிவித்துள்ளது. ஆக., 28 இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை