உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்: மகர விளக்கு கால நெய்யபிஷேகம் தொடக்கம்

24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்: மகர விளக்கு கால நெய்யபிஷேகம் தொடக்கம்

சபரிமலை: மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். சபரிமலையில் மகரஜோதி தரிசனம் ஜன.14 ல் நடக்கிறது. இதற்காக சபரிமலை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் நடத்தி வருகின்றனர். தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கியது.நேற்று மதியம் மகர விளக்குகால முதல் களபாபிஷேகம் நடந்தது. சபரிமலை நடை திறக்கப்பட்ட 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து இருக்கின்றனர். மகர விளக்கு காலத்தில் முதற்கட்ட பாதுகாப்பு பணிகளுக்காக 10 டி. எஸ். பி., 35 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ., ஏட்டு உட்பட 1593 போலீசார் சன்னிதானத்தில் பொறுப்பேற்றுள்ளனர். தனி அதிகாரியாக எஸ். பி., எம் .கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜன. 14 ல் மகரஜோதி தரிசனம் நடக்கிறது. அன்று மாலை தீபாராதனைக்கு பின்னர் பொன்னம்பலமேட்டில் மகரஜோதியும் மகர நட்சத்திரமும் தெரியும். புல்மேடு சம்பவம் எதிரொலியாக மகர ஜோதி நாளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். அன்றைய தினத்தில் பக்தர்கள் வருகை கட்டுப்படுத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை