உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாட்டு மருத்துவபடிப்பு வினாத்தாள் விற்பனை : கேரள போலீஸ் வழக்கு

வெளிநாட்டு மருத்துவபடிப்பு வினாத்தாள் விற்பனை : கேரள போலீஸ் வழக்கு

புதுடில்லி: வெளிநாட்டு மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் சமூக வலைதளத்தில் விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவலையடுத்து கேரள சைபர் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டு மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெறவிருந்த நிலையில் வரும் ஜூலை 06-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 50 நகரங்களில் 70 மையங்களில் நடக்கிறது. இரு ஷிப்டுகளில் இத்தேர்வு நடைபெற உள்ளது.இந்நிலையில் இத்தேர்வு வினாத்தாள் சமூக வலைதளத்தில் விற்கப்படுபுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கேரள தலைநகர் திருவனந்தபுரம் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
ஜூலை 05, 2024 05:40

இதெல்லாம் விற்பவர்கள் முரசொலி மூலப்பத்திரத்தை பிரதியெடுத்து விற்கலாமே..


RaajaRaja Cholan
ஜூலை 05, 2024 10:18

எது இருக்கோ அதை தானே விற்க முடியும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை