உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமோசா, ஜிலேபி உடல் நலத்திற்கு கேடு; எச்சரிக்கை வாசகம் வைக்கிறது மத்திய அரசு

சமோசா, ஜிலேபி உடல் நலத்திற்கு கேடு; எச்சரிக்கை வாசகம் வைக்கிறது மத்திய அரசு

நாக்பூர்: சிகரெட் பாக்கெட்டுகள், மது பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்கள் இருப்பதுபோல், சமோசா, ஜிலேபி போன்ற நொறுக்குத்தீனிகளை விற்கும் கடைகளில் இனி எச்சரிக்கை வாசகங்களை வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சிகரெட் பாக்கெட்டுகளில், 'புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது' எனவும், மது பாட்டில்களில், 'மது வீட்டிற்கும், நாட்டிற்கும், உயிருக்கும் கேடு' போன்ற எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுகின்றன.இதே அளவுக்கு, இனிப்புகளும் நொறுக்குத்தீனிகளும் நம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.சமீபத்தில், 'லான்செட்' மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வில், '2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 44 கோடி பேர் உடல் பருமன், நீரிழிவு, ரத்த கொதிப்பு போன்ற வாழ்வியல் மாற்ற நோய்களுக்கு உள்ளாகக்கூடும்' என, எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை, அதிக இனிப்பு, கொழுப்பு மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது.இதையடுத்து, சமோசா, ஜிலேபி, பக்கோடா போன்றவற்றில் உள்ள சர்க்கரை, கொழுப்புச்சத்துகளின் அளவு, அது உடலுக்கு ஏற்படுத்தும் தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகங்களை கடைகளின் வாசலில் வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உணவகத்தில், சோதனை ஓட்டமாக இந்த எச்சரிக்கை வாசகம் வைக்கப்பட உள்ளது. இதேபோல் மற்ற உணவகங்கள் முன் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.'இது வெறும் எச்சரிக்கை தான். இந்த உணவுகளுக்கு தடை விதிக்கவில்லை.'இதுபோன்ற அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ள உணவுகள் அதிகம் சாப்பிடுவதை ஊக்குவிக்கக் கூடாது என்பதற்காகவே, இந்த எச்சரிக்கை நடைமுறை துவக்கப்பட்டுள்ளது' என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ram pollachi
ஜூலை 15, 2025 15:32

ரெண்டு ஜிலேபி சாப்பிட்டு நாலு சர்க்கரை மாத்திரை சாப்பிடும் நபர்களும் உண்டு. பசித்தால் சாப்பிடு நேர நேரத்திற்கு சாப்பிட்டு உழைக்காமல் இருந்தால் வீடு மருத்துவமனையாகிவிடும்.


அப்பாவி
ஜூலை 15, 2025 09:48

படத்தில் இருப்பது ஜிலேபி அல்ல ஜாங்கிரி. வெறும் உளுந்து மாவுதான். ஒண்ணும் பண்ணாது. அதுக்குன்னு மூட்டை கணக்கில் சாப்பிடக் கூடாது.


Padmasridharan
ஜூலை 15, 2025 06:54

புகைபிடித்தல், மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு என்று அச்சிடப்பட்டு அதை விற்பதும் மானக்கேடு. இதென்ன பெருமையான சட்டம். பிறகு இவற்றால் வரும் நோய்களுக்கு அரசு மருத்துவமனைகள் வேற. பணத்தை கொடுத்து நோயின் வலியை வாங்கும் மக்கள் இலவச மருத்துவம் செய்து நல்ல பெயரை வாங்கும் அரசாங்கம். வேடிக்கையாக இருக்கின்றது சாமி


Kasimani Baskaran
ஜூலை 15, 2025 04:06

இனிப்பு மற்றும் அதிக உப்பு ஆபத்தானது. இனிப்பை குறைத்தால் கூடுதலாக 20 ஆண்டுகள் வாழலாம். உடல் உழைப்பு, 5-8 மணி நேர ஒய்வு, கவலையின்மை ஒருவனை அதிக நாள் வாழவைக்கும்.


rama adhavan
ஜூலை 15, 2025 01:49

கொழுப்பு சத்து நிறைய உள்ள பர்கர், பிஸ்சா, நுடில், பரோட்டா முதலிய உணவுகளுக்கும் ஏச்சரிக்கை அறிவிப்பு தேவை.


தாமரை மலர்கிறது
ஜூலை 15, 2025 01:35

சிகரெட்டில் போடாத எச்சரிக்கையா? இந்தியர்கள் எந்த எச்சரிக்கையும் கண்டுகொள்ள மாட்டார்கள். , இனிப்பு தின்பண்டங்கள், பெப்சி, கோக், எண்ணையில் பொறித்த பக்கோடா, வடை, என்று அனைத்திற்கும் இருநூறு சதவீதம் வரி போடுங்கள். அது மட்டுமே தான் ஒரே தீர்வு. பணமில்லாமல் வறுமையில் இருந்தபோது இந்தியர்கள் ஹெல்தியாக இருந்தார்கள். இப்போது இருபது வயதில் சர்க்கரை நோய் வந்து, தொந்தி தள்ளி நடக்க முடியாமல் உள்ளார்கள். சைக்கிளுக்கு வரியை முற்றிலும் குறைத்து, கார், பைக்கிற்கு நூறு சதவீதம் வரியை ஏற்றுங்கள்.


சமீபத்திய செய்தி